Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான்; நடிகை நித்யா மேனன் தகவல்

திருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான்; நடிகை நித்யா மேனன் தகவல்

By: Nagaraj Wed, 30 Dec 2020 8:15:45 PM

திருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான்; நடிகை நித்யா மேனன் தகவல்

திருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்து, அதை தனது கடினமான உழைப்பால் தக்க வைத்து கொண்டவர் தான் நித்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நித்யாமேனன் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலமாக தான் சினிமா உலகில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நித்யா மேனன் வெப் சீரியஸில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.

இந்த நிலையில் நித்யா மேனன் ஒரு பேட்டியில், அவரை முன்னணி மலையாள நடிகரான துல்கர் சல்மான் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாக கூறியிருக்கும் தகவல்கள், தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

nithya menon,marriage,tulkarsalman,information,convinced ,
நித்யா மேனன், திருமணம், துல்கர்சல்மான், தகவல்கள், சமாதானப்படுத்தினார்

அதாவது மலையாளத்தில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் நித்யா மேனனும் இணைந்து 'ஓ காதல் கண்மணி', '100 டேஸ் ஆஃப் லவ்' போன்ற படங்களில் நடித்துள்ளனர். அதோடு, இருவருடைய கெமிஸ்ட்ரியும் படங்களில் செம்மையாக இருப்பதாக அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு.

இவ்வாறிருக்க, நித்யா மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், துல்கர் சல்மான் நித்யாவை திருமணம் செய்து கொள்ள பல்வேறு விதங்களில் முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பற்றி நித்யா மேனன் கூறுகையில், 'துல்கர் ஒரு குடும்பஸ்தர். அவர் என்னிடம் வந்து அவருடைய கல்யாண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்றும், கல்யாணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும், என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல்வேறு விதங்களில் சமாதானப்படுத்தினார்' என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் 32 வயதாகியும் நித்யாமேனன் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நித்யா மேனன் மற்றும் துல்கர் சல்மான் பற்றிய இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Tags :