Advertisement

வேலுநாச்சியார் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது!

By: Monisha Mon, 28 Dec 2020 09:21:04 AM

வேலுநாச்சியார் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது!

தமிழ் திரையுலகில் பாகுபலி படத்துக்கு பிறகு சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்கி வருகிறார்.

ராமாயண காவியம் பிரபாஸ், சயீப் அலிகான் நடிப்பில் ஆதிபுருஷ் பெயரில் உருவாகிறது. இந்தியில் ராணி பத்மினியின் வாழ்க்கை தீபிகா படுகோனே நடிப்பில் பத்மாவத் பெயரில் வெளிவந்தது. ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை மணிகர்னிகா பெயரில் கங்கனா ரணாவத் நடிக்க வெளியானது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் சரித்திர படங்கள் வந்துள்ளன.

velunacharya,life,cinema,nayanthara,keerthi suresh ,வேலுநாச்சியார்,வாழ்க்கை,சினிமா,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்

இந்த நிலையில் 17-ம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் ஆட்சி செய்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை சுசிகணேசன் இயக்குகிறார்.

இவர் பைவ் ஸ்டார், திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர். வேலுநாச்சியார் வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருந்தால் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags :
|
|