Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வனிதா வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் கொடுத்த அரிய புகைப்படம் இணையதளத்தில் வைரல்

வனிதா வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் கொடுத்த அரிய புகைப்படம் இணையதளத்தில் வைரல்

By: Monisha Wed, 24 June 2020 11:44:12 AM

வனிதா வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் கொடுத்த அரிய புகைப்படம் இணையதளத்தில் வைரல்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் அளித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. 1995ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் போது விஜய்க்கும் வனிதாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இந்த படத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இந்த நட்பு இன்று வரை இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் குறித்து திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் விஜய்யுடன் பழகிய நாட்களையும் கூறி வந்த நிலையில் தன்னுடைய பங்கிற்கு தான் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஒரு அரிய புகைப்படத்தை பதிவு செய்த வனிதா விஜயகுமார், தனது மலரும் நினைவுகளை கூறியுள்ளார்.

actress vanitha,actor vijay,birthday,surprise,photo ,நடிகை வனிதா,நடிகர் விஜய்,பிறந்தநாள்,சர்ப்ரைஸ்,புகைப்படம்

தனது மகன் ஸ்ரீஹரி பிறந்த நாளை சரியாக ஞாபகம் வைத்து விஜய் தனது வீட்டிற்கு மனைவியுடன் வந்து அவனை வாழ்த்தியது குறித்து வனிதா குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மகன் ஸ்ரீஹரி பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்துக் கூற தனது வீட்டிற்கு வந்த போது தனது தாயார் மஞ்சுளா விஜயகுமாரும் உடன் இருந்ததையும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தனது வீட்டிற்கு வந்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த நாளை தன்னால் மறக்க முடியாது என்றும் வனிதா கூறியுள்ளார். வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளீயிட்ட இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :