Advertisement

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி?

By: Nagaraj Tue, 06 Oct 2020 11:56:55 AM

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி?

விஜய்-முருகதாஸ் கூட்டணி சேரும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று செய்திகள் உலா வருகிறது.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் இந்த வருட ஆரம்பத்தில் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் படக்குழு அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்கின்றனர்.

vijay film,murugadoss,budget,kollywood ,விஜய் படம், முருகதாஸ், பட்ஜெட், கோலிவுட்

இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவரது 65வது படத்தை முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குகிறார்.

படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது என்ன விஷயம் என்றால் விஜய்யின் 65வது படத்திற்கு ரூ. 130 கோடி பட்ஜெட் என்று கூறப்படுகிறது. இந்த செய்திதான் தற்போது கோலிவுட்டை செம ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. ஆனால் இதுவரை படத்தின் பட்ஜெட் பற்றி படக்குழு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|