Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிதியுதவி

சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிதியுதவி

By: Monisha Tue, 07 July 2020 10:53:29 AM

சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிதியுதவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலை செய்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நடிகர் நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

rape,jayapriya,financed,vijay,fans ,பாலியல் பலாத்காரம்,ஜெயப்ரியா,நிதியுதவி,விஜய்,ரசிகர்கள்

இந்த நிலையில் அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தாருக்கு புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த நிதியுதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் வழங்குவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டார். மேலும் திமுக சார்பில் சிறுமி ஜெயபிரியா குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது.

Tags :
|
|