Advertisement

விஜய் சேதுபதியின் மலையாள படம் தெலுங்கில் டப்!

By: Monisha Fri, 09 Oct 2020 1:11:59 PM

விஜய் சேதுபதியின் மலையாள படம் தெலுங்கில் டப்!

தமிழ் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அந்த வகையில் மலையாள திரையுலகில் முதல் முதலாக விஜய் சேதுபதி நடித்த படம்தான் 'மார்கோனி மாத்தாய்'.

இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi,malayalam,telugu,dubbed film ,விஜய் சேதுபதி,மலையாளம்,தெலுங்கு,டப்பிங் படம்

இந்த நிலையில் மலையாளத்தில் நல்ல ஹிட் ஆகியுள்ள இந்த படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

தெலுங்கு டப்பிங் படத்திற்கு 'ரேடியோ மாதவ்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் முதல் மலையாள திரைப்படமான மார்கோனி மாத்தாய் தெலுங்கிலும் நல்ல ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|