Advertisement

மாஸ்டர் படத்தை பார்த்து அதிரடி முடிவு எடுத்த தளபதி விஜய்!

By: Monisha Fri, 28 Aug 2020 3:20:37 PM

மாஸ்டர் படத்தை பார்த்து அதிரடி முடிவு எடுத்த தளபதி விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ் உள்பட பலர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனேகமாக இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஓடிடியில் நிச்சயமாக வெளியே வராது என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பாளர் உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

master film,actor vijay,lokesh kanagaraj,satisfaction,praise ,மாஸ்டர் படம்,தளபதி விஜய்,லோகேஷ் கனகராஜ்,முழு திருப்தி,பாராட்டு

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்க்காக பிரத்தியேகமாக மாஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டதாகவும் படத்தை பார்த்து முழு திருப்தி அடைந்த விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டி உள்ளார்.

அது மட்டுமின்றி கூடுதல் போனசாக மீண்டும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ்க்கு தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அனேகமாக 'தளபதி 66' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :