Advertisement

உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்; நடிகை குஷ்பு டுவிட்

By: Monisha Wed, 21 Oct 2020 6:28:01 PM

உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்; நடிகை குஷ்பு டுவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் விஜய் சேதுபதி விலகி விட்டாலும் அது குறித்த செய்திகள் இன்னும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

muthiah muralitharan,biography,vijay sethupathi,sexual threat,khushboo ,முத்தையா முரளிதரன்,வாழ்க்கை வரலாறு,விஜய் சேதுபதி,பாலியல் மிரட்டல்,நடிகை குஷ்பு

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, 'விஜய் சேதுபதி உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்' என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

"விஜய் சேதுபதி அவர்களே, நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இப்போது இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது காட்டுமிராண்டித்தனமானது. கண்டிப்பாக இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததைச் செய்ய ஒரு பெரிய மனசு வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்" என கூறியுள்ளார்.

Tags :