Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸில் இன்றைய நாமினேஷன் செய்யப்படுபவர்கள் யார்? ப்ரோமோ வீடியோ வெளியீடு

பிக்பாஸில் இன்றைய நாமினேஷன் செய்யப்படுபவர்கள் யார்? ப்ரோமோ வீடியோ வெளியீடு

By: Nagaraj Mon, 21 Dec 2020 4:24:13 PM

பிக்பாஸில் இன்றைய நாமினேஷன் செய்யப்படுபவர்கள் யார்? ப்ரோமோ வீடியோ வெளியீடு

இன்றைய நாமினேஷன் ப்ரோமோ வெளியீடு... கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக வருகிறது,

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த நிகழ்ச்சி தற்போது மந்தமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இன்னும் ஒருமாதத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 'சூப்பர் சிங்கர்' ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

nomination,archana,anita sampath,big boss,promo ,நாமினேஷன், அர்ச்சனா, அனிதா சம்பத், பிக்பாஸ், ப்ரோமோ

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் 'விஜய் டிவி' மற்றும் 'ஜீ தமிழ்' மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று திங்கட் கிழமை என்பதால் நாமினேஷன் உண்டு. இதற்கிடையில் விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற ஷிவானி நாராயணன், ஆஜித், சோமசேகர், ஆரி, கேப்ரில்லா, அனிதா சம்பத் ஆகியோரின் பெயர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்து குறிப்பிடுகிறார்கள்.

Tags :