Advertisement

சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

By: Monisha Wed, 05 Aug 2020 11:48:30 AM

சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978-ல் வெளியாகி வசூல் குவித்த படம் சிகப்பு ரோஜாக்கள். ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிபிடித்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி பற்றிய கதை. இந்த படம் இந்தியில் ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியானது.

இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

red roses,part ii,keerthi suresh,samantha,bharathiraja ,சிகப்பு ரோஜாக்கள், இரண்டாம் பாகம்,கீர்த்தி சுரேஷ்,சமந்தா,பாரதிராஜா

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பாரதிராஜா மகன் மனோஜ் முயற்சிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவே இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி ஏமாற்றும் ஆண்களை ஒரு பெண் பழி தீர்ப்பதுபோன்று கதாநாயகியை மையமாக வைத்து திரைக்கதையில் மாற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags :