Advertisement

செங்கோல் யார் கையில் இருக்கணும்; பிக்பாஸ் 4 கமல் ப்ரோமோ!

By: Nagaraj Sat, 24 Oct 2020 8:01:33 PM

செங்கோல் யார் கையில் இருக்கணும்; பிக்பாஸ் 4 கமல் ப்ரோமோ!

செங்கோல் யார் கையில இருக்கணும்ங்குறது ரொம்ப முக்கியம். இருக்குற நிலைமையை பார்த்த நம்ம கையில எடுக்கணும் போலருக்கு” என்று அரசியலும், பிக் பாஸ் வீட்டின் நிலைமையும் ஒன்று சேர்த்து கமல் கூறுவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ரேகா எவிக்ட் செய்யப்பட்டு தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர் . இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் லிஸ்டில் ஆஜித், பாலா, சுரேஷ். ஆரி, அனிதா உள்ளிட்ட 5 பேர் உள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் நாடா? காடா? டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய பிரச்சினையே வெடித்தது. கையில் இருந்த செங்கோலால் சுரேஷ் சனத்தை தாக்க, அவர் கொஞ்சமும் மரியாதை இன்றி வெடித்து விட்டார். இந்த பஞ்சாயத்து பிக்பாஸ் வரை சென்றது.

scepter,in whose hand,important situation,big boss,kamal ,செங்கோல், யார் கையில், முக்கியம் நிலைமை, பிக்பாஸ், கமல்

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் வருகை தரும் சனிக்கிழமையான இன்றைய நாளை பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கொளுத்தி போடுறேன், கொளுத்தி போடுறேன் சொன்னவரு கையிலேயே வெடிச்சிடுச்சி; போட்டியா இருக்க வேண்டியது போடா. வாடான்னு தரம் கொறஞ்சிடுச்சி.

இது (செங்கோல்) யார் கையில இருக்கணும்ங்குறது ரொம்ப முக்கியம் .இருக்குற நிலைமையை பார்த்த நம்ம கையில எடுக்கணும் போலருக்கு” என்று அரசியலும், பிக் பாஸ் வீட்டின் நிலைமையும் ஒன்று சேர்த்து கூறுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Tags :