Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மம்முட்டி பிறந்தநாளை கொண்டாட அழைத்து செல்லாதது ஏன்? அழுது அடம் பிடித்த சிறுமி

மம்முட்டி பிறந்தநாளை கொண்டாட அழைத்து செல்லாதது ஏன்? அழுது அடம் பிடித்த சிறுமி

By: Nagaraj Fri, 11 Sept 2020 9:17:25 PM

மம்முட்டி பிறந்தநாளை கொண்டாட அழைத்து செல்லாதது ஏன்? அழுது அடம் பிடித்த சிறுமி

மம்முட்டி பிறந்தநாளை கொண்டாட ஏன் அழைத்து செல்லவில்லை என்று கேட்டு அடம்பிடித்து அழுத 5 வயது சிறுமியின் வீடியோ செம வைரலாகி வருகிறது.

நடிகர் மம்முட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தனது 69வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். குறிப்பாக மரக்கன்று முளைத்தது போன்ற வடிவத்துடன் உருவாக்கப்பட்டிருந்த அந்த பிறந்தநாள் கேக் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை மம்முட்டிக்கு தெரிவித்தனர்.

fans,baby,mammoth,surprise,crying ,ரசிகர்கள், குழந்தை, மம்முக்கா, ஆச்சரியம், அழுகை

இந்தநிலையில் 5 வயதே ஆன பெண் குழந்தை ஒன்று, மம்முட்டியின் பிறந்தநாளை கொண்டாட, அவரது வீட்டிற்கு தன்னை ஏன் அழைத்து செல்லவில்லை என அவரது தந்தையுடன் முரண்டு பிடித்து அழும் ஒரு வீடியோ ஒன்றும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்ல, அந்த குழந்தை மம்முட்டியின் செல்லப்பெயரான மம்முக்கா என்று சொல்லி அழுவதையும், அந்த குழந்தைக்கு மம்முட்டி பற்றியும் அவரது பிறந்தநாள் பற்றியும் எப்படி மனதில் பதிந்தது என்றும் ரசிகர்கள் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Tags :
|
|