Advertisement

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விழா அறிவிப்பு

By: Monisha Sat, 17 Oct 2020 11:29:30 AM

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விழா அறிவிப்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் அளித்து வரும் நிலையில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக திறமையான கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்க உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா, நீதானே எந்தன் பொன்வசந்தம், கோகுலத்தில் சீதை, பூவே பூச்சூடவா, என்றென்றும் புன்னகை, ராஜாமகள், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்கள் மற்றும் ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீன்ஸ், சூப்பர் மாம், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்களில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

zee tamil,tv,awards,serials,show ,ஜீ தமிழ்,தொலைக்காட்சி,விருதுகள்,சீரியல்கள்,நிகழ்ச்சி

அரசின் விதிகளை கடைபிடித்து, சமூக இடைவெளி கட்டுப்பாட்டுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் & நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரு பழநியப்பன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரியா ராமன், நடிகர் ஸ்ரீகுமார், நடிகர் ஜெய் ஆகாஷ், ஆர்ஜே விஜய், நடிகை ரேஷ்மா, நடிகை ஆயிஷா மற்றும் நடிகர் தர்ஷணா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Tags :
|
|