Advertisement

குளிர்காலத்திற்கு ஏற்ற வகைவகையான ஜாக்கெட் மற்றும் ஸ்வெட்டர்!

By: Monisha Thu, 26 Nov 2020 3:27:10 PM

குளிர்காலத்திற்கு ஏற்ற வகைவகையான ஜாக்கெட் மற்றும் ஸ்வெட்டர்!

குளிர்காலத்தில் ஜாக்கெட் மற்றும் ஸ்வெட்டர்களை அதிகமாக பயன்படுத்துவோம். இந்த பதிவில் வகைவகையான ஜாக்கெட் மற்றும் ஸ்வெட்டர்களை பார்க்கலாம்.

ஸ்வெட் ஜாக்கெட்
ஜிம், ஒர்க் அவுட், சைக்ளிங், ஜாகிங் போன்ற தருணங்களில் கனமாக இல்லாமல் எளிமையாக உடுத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும் ஸ்வெட் ஜாக்கெட் குளிர்காலத்திர்ற்கு மிகவும் பொருத்தமானது. நண்பர்களுடன் வெளியில் செல்ல ஒரு சாதாரண உடையாகவும் இதை அணிந்து கொள்ளலாம் !

லெதர் ஜாக்கெட்
குளிர் காலத்திற்கு எப்போதும் ஏற்றது லெதர் ஜாக்கெட். இதை அடிக்கடி துவைக்கத் தேவை இல்லை. சிக் என கச்சிதமாக, குளிருக்கு இதமாக இருக்கும். பூட்ஸ் மற்றும் டெனிம் பாண்டோடு அணிந்து அசத்துங்கள்! பயணங்களின்போது மிகவும் குளிரும் பொது , பைக்கில் செல்லும்போது , இரவு நேரங்களில் பார்ட்டி போன்ற நேரங்களில் இதை அணிந்து செல்லலாம்.

winter,types,jacket,sweater,fashion ,குளிர்காலம்,வகைகள்,ஜாக்கெட்,ஸ்வெட்டர்,பேஷன்

ப்ளேஸர்
ஆபீஸ் போன்ற இடங்களுக்கு ஒரு ஃபார்மல் லுக் கொடுக்கும் ப்ளேஸர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அணிந்து அசத்தும் வகையில் பல நிறங்களில் கிடைக்கிறது. ஃபார்மல் பாண்ட், ஸ்கர்ட் ஆகியவற்றோடு அணிந்து கொள்ளலாம். கோடைகாலங்களில் காட்டன் அல்லது சிந்தெடிக் பிளேஸர்கள் அணியலாம் ஆனால் குளிர்காலத்தில் குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற தடிமனான நீண்ட பிளேஸர்களைத் தேர்ந்தெடுங்கள் !

வின்ட் சீடர்
பனிக்காற்றில் செல்ல இருக்கிறீர்களா? இந்த வின்ட் ஷீட்டர்ரை பயன்படுத்துங்கள். இது பயணங்களின்போது உங்களை பாதுகாக்கும். இதை நீங்கள் துவைக்கத் தேவை இல்லை. இதற்கேற்ற ஒரு கிராப் பேண்ட் அல்லது டிரௌசர் உடன் அணிந்து செல்லலாம்.

ட்ரென்ச் கோட்
கொஞ்சம் நீளமாக இருக்கும் ட்ரென்ச் கோட், இந்த சீசன்க்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீளமாக இருந்தாலும் எடை குறைவாகவும், வாட்டர்ப்ரூஃப்பாகவும் இருக்கும். மேல் கூறிய சிறிய கச்சிதமான ஜாக்கெட்டுகளில் விருப்பம் இல்லையென்றால், இதுபோல் தளர்வான ட்ரென்ச் கோட் (jacket) அணிந்து செல்லுங்கள். எந்த வித டிரஸ் மீதும் இதை அணிந்து கொள்ளலாம்.

Tags :
|
|
|