Advertisement

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!

By: Monisha Thu, 18 June 2020 3:57:57 PM

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!

பெண்கள் பொதுவாக தாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதுபோல் தான் ஹேண்ட் பேக்கும். பேக்கின் உள்ளே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, எதையெல்லாம் எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்பார்கள். அவ்வாறு ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்!

ஹேண்ட்பேக் மற்றும் அதன் உள்ளேவைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் எடை மற்றும் அளவு, ஸ்ட்ராப்பின் நீளம் போன்றவைதான் சம்பந்தப்பட்டவருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீளம் அதிகமுள்ள, தடிமனான ஸ்ட்ராப் வகைகளைப் பயன்படுத்துவதே சிறப்பு.

பை தயாரிக்க எந்த வகைத் துணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். தடிமனான தோல் அல்லது ரெக்ஸினால் செய்யப்பட்டிருந்தால், தசைகளில் அழுத்தமாகப் பதிந்து அந்தப் பகுதியில் வலியை ஏற்படுத்தும். எனவே, தரமான மற்றும் எடை அதிகமில்லாத துணிகளில் தயாரித்த பைகளை மட்டுமே வாங்கவும்.

handbags,ladies,fashion,advice ,ஹேண்ட்பேக்,பெண்கள்,பேஷன்,அறிவுரைகள்

ஒருபக்கமாக ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு சென்றால், தோள்பட்டையில் வலி ஏற்படுவதுடன், உடலின் அமைப்பிலும் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, வலது பக்கம் ஹேண்ட்பேக் தொங்கவிடுபவர்களுக்கு, காலப்போக்கில் வலது தோள்பட்டை சற்று கீழ்நோக்கியும், இடது தோள்பட்டை சற்று மேல்நோக்கியும் மாறும். இதனால் கழுத்துவலி ஏற்படும்.

அதிக எடையுள்ள ஹேண்ட்பேக்கைச் சுமப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான அடிப்படை. எனவே, தினமும் ஹேண்ட்பேக்கைச் சுத்தப்படுத்தவும். முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும். தேவையில்லாத பொருள்களை அகற்றவும்.

handbags,ladies,fashion,advice ,ஹேண்ட்பேக்,பெண்கள்,பேஷன்,அறிவுரைகள்

ஹேண்ட்பேக் நிர்வாகிப்பது எப்படி?
முதலில் தேவையானவை, தேவையில்லாதவை என உங்களிடம் உள்ளவற்றைப் பிரித்துவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பையை, இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒருபுறம் அத்தியாவசியத் தேவைகளையும், மற்றொருபுறம் ஆடம்பரத் தேவைகளையும் வைப்பது நல்லது.

அத்தியாவசியப் பொருள்களின் அளவைப் பொறுத்து, அதற்கேற்ற பை வாங்கிக்கொள்ளுங்கள். தற்காலிகமாக இருக்கும் பொருள்களை, அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள். வேண்டாமென்பதை, தாமதிக்காமல் நீக்கிவிடுங்கள்.

handbags,ladies,fashion,advice ,ஹேண்ட்பேக்,பெண்கள்,பேஷன்,அறிவுரைகள்

ஹேண்ட்பேக் தேர்ந்தெடுப்பது எப்படி?
முடிந்தவரை இரண்டு கைகளுக்கும் பொருந்தும் பைகளைப் பயன்படுத்தவும். ஒருபக்கப் பை என்றால், நீளமான பைகளாக வாங்கிக்கொள்ளவும். அதை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ மாட்டிக்கொள்ளவும்.

ஒருபக்கப் பைகளை, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி, சமமான நேரம் தொங்கவிட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கைகளை மாற்றிக்கொள்வது சிறப்பு. பை இருக்கும் தோள்பட்டையில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனடியாகக் கையை மாற்றிக்கொள்ளவும்.

ஒருபக்க ஹேண்ட்பேக்கில், இடுப்புக்கு அருகே பையின் அடிப்பகுதி வருமாறு இருக்க வேண்டும். அந்தளவுக்கு நீளம் அவசியம். எடை அதிகமுள்ள பொருள்களை, பையின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவும். எடை குறைவான பொருள்கள், மேலே இருக்க வேண்டும்.

Tags :
|