Advertisement

வயது வித்தியாசமின்றி அனைவரும் அணியும் வளையல்கள்

By: Karunakaran Tue, 03 Nov 2020 2:04:44 PM

வயது வித்தியாசமின்றி அனைவரும் அணியும் வளையல்கள்

வயது வித்தியாசமின்றி அவசியமாய் அணியும் ஆபரணங்களில் ஒன்று வளையல்கள். தினசரி அணிந்து கொள்ளும் வளையல்கள் பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். தங்கவளையல். கல்பதித்த வளையல்கள், முத்து பவளம் போன்றவை பதித்த வளையல்கள், வைரம் பதித்த வளையல்கள், எனாமல் வேலைப்பாடு செய்யப்பட்ட வளையல்கள் என்று பலப்பல புதிய வடிவங்களில் வளையல்களை பண்டிகைகாலங்களில் காண முடிந்தது.

வெறும் தங்கத்தினால் ஆன கெட்டி வளையல்கள் தினசரி அணிந்து கொள்வதற்கு ஏற்றவையாக இருக்கும். சிறுமணிகள் கோர்க்கப்பட்ட போன்ற வடிவத்தில் ஒரு விரற்கடை அளவு அகலம் கொண்டதாக உள்ள வளையல்கள் பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கிறது. வெறும் வெள்ளை நிற கற்களும் பலவண்ணகற்களும் பதிக்கப்பட்ட வளையல்கள் மிக அழகானவை. மிகவும் தடிமனாக காட்சியளிக்கும் ஆன்டிக் வகை வளையல்கள் அன்கட் மற்றும் அன்பாலிஸ்ட் கற்கள் பதிக்கப்பட்டு பார்க்க மிக பிரம்மாண்டமாகவும் பாரம்பரிய தோற்றத்தைக் கொண்டதாகவும் இருப்பதை காண முடிகிறது.

bracelets,womens,gold bangels,antique type bracelets ,வளையல்கள், பெண்கள், தங்க வளையல்கள், பழங்கால வகை வளையல்கள்

பொதுவாக வைர வளையல்கள் மிக மெல்லிய வடிவமைப்பு கொண்டவையாகவும் ஆங்காங்கே கற்கள் தனித்து தெரிய கூடியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு மாறாக மிக பொடியான வைரக்கற்களை கொத்துக்கொத்தாக பதிக்கப்பட்டு வரும் இன்றைய வைரவளையல்கள் பார்க்க பிரமிப்பூட்டும் விதமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. நகாசு வேலை செய்யப்பட்ட வளையல்கள், கொல்கத்தா ஃபிலிகிரி டிசைன் வளையல்கள், ரோடியம்ஃபினிஷ் கொண்ட வளையல்கள், ஓரடுக்கு, ஈரடுக்கு மற்றும் பல அடுக்கு கொண்ட வளையல்கள் பல டிசைன்களில் கற்கள் பதித்தும் பதிக்காமலும் கிடைக்கின்றன.

சில வளையல்கள் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் அகலமாகவும் அதிக வேலைப்பாடு கொண்டதாகவும் இருந்தாலும் மிகவும் எடை குறைவாக, லேசாக, அணிந்து கொள்ள வசதியாக இருப்பது ஆச்சரியமான வடிவமைப்பு ஆகும். சில வளையல்களில் பாதி இடத்திற்கு நல்ல வழுவழுப்பான ஃபினிஷ் கொண்டதாகவும், மீதி இடத்திற்கு சொரசொரப்பான பினிஷ் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன.

Tags :
|