Advertisement

கர்ப்ப காலத்தில் ஸ்டைலாக வலம் வர இந்த ஆடைகளை வாங்குங்க!

By: Monisha Thu, 24 Dec 2020 7:54:52 PM

கர்ப்ப காலத்தில் ஸ்டைலாக வலம் வர இந்த ஆடைகளை வாங்குங்க!

பெண்களே கர்ப்பகாலத்தில் அணியும் உடைகளை பற்றிய கவலையை விடுங்கள். உங்கள் தாய்மை பூரிப்பை கொண்டாடுங்கள். கர்ப்ப காலத்தில் என்ன உடை அணியலாம் என்பதில் உங்களுக்கு ஐடியா இல்லாமல் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவி புரியும்.

நீங்கள் புகைப்படத்திற்கு தயாராகும் சமயம் மற்றும் பார்ட்டி சமயங்களில் ஸ்ட்ராப்லெஸ் மாக்சி வகை உடைகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் வயிற்றின் மீதான கவனம் சிதறி உங்கள் தோள்கள் மற்றும் ஸ்டராப்லெஸ் உடையின் ஸ்டைலில் மற்றவர்கள் பார்வை பதியும்.

உங்களுக்கு பிடித்தமான உடைகளை நீங்கள் அணிய முடியாமல் போய் விட்டதே என்று வருத்தமா? இதற்காகவே நீங்கள் நூடில் ஸ்ட்ராப் உடையை தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களில் தேர்ந்தேடுப்பதும் பூக்கள் வடிவம் இருப்பதும் மேலும் உங்கள் தாய்மையை அழகாக காட்டும்.

pregnancy,style,clothing,long tops,material ,கர்ப்ப காலம்,ஸ்டைல்,ஆடைகள்,லாங் டாப்ஸ்,மெட்டிரியல்

நீங்கள் தாய்மை அடைந்தாலும் க்யூட் ஆகவும் சிக்கெனவும் உங்களை அடையாளப்படுத்த விரும்புகிறீர்களா அப்போது உங்களுக்கு அவசியமான உடை இந்த ஷார்ட் மற்றும் லாங் டாப்ஸ்கள். ஸ்ட்ரெச்சபிள் மெட்டிரியல் இருப்பின் இன்னமும் நல்லது. இந்த வகை டாப்ஸ் மட்டும் அணிந்து கால்களில் உடைக்கு நேர்மாறான ஷூக்களை அணிந்தீர்கள் என்றால் நீங்கள் தாய்மை அடைந்தவர் என்பதே யாருக்கும் தெரியாது.

பொஹீமியன் உடை ட்ரெண்ட் மற்றும் பேஷன் இரண்டும் இணைந்த நவீன நாகரிக உடையாகும். கர்ப்ப நேரத்தில் உங்களை எங்கு சென்றாலும் அற்புதமாக காட்டும். அம்மா ஆக போகும் பெண்களுக்கான அற்புத தேர்வு இந்த பொஹீமியன் உடைகள்தான்.

ஜம்ப் சூட்ஸ் எப்போதும் தன்னை குழந்தையாகவே பாவிக்கும் பெண்களுக்கான பிரத்யேக உடை. தான் இன்னொரு குழந்தையை சுமந்தாலும் இந்த உடை அவர்களை இன்னமும் குழந்தையாகவே காட்டும் மாயம் செய்ய வல்லது. இந்த உடை தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கான ஒரு வரம். இதற்கேற்ற ஒரு சுவாரஸ்யமான ட்யூனிக்ஸ் அல்லது டாப்ஸை தேர்ந்தெடுப்பது உங்களிடம் இருக்கிறது.

pregnancy,style,clothing,long tops,material ,கர்ப்ப காலம்,ஸ்டைல்,ஆடைகள்,லாங் டாப்ஸ்,மெட்டிரியல்

மென்மையான உடலோடு ஓட்டும் தன்மை இல்லாத ஷிஃபான் உடைகள் உங்கள் கர்ப்ப காலத்தில் அணிய ஏற்ற உடை. தொடை வரைக்குமான கவுன் அல்லது முழங்கால் வரைக்குமான கவுன் இதனை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இதனுடன் கணுக்கால் வரையிலான சாக்ஸ் அல்லது முழங்கால் வரையிலான சாக்ஸ் அணிவது உங்களை மேலும் அழகாக்கும்.

கர்ப்ப காலத்தில் கருப்பு நிற உடை இல்லாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது. தாய்மை பெண்களுக்காகவே தனிப்பட்ட டிசைனை கொண்டது போல்கா டாட்ஸ் உடைகள். இந்த மாதிரி என்றும் க்ளாஸிக் உடைகள் அணிவதை நீங்கள் மறக்காதீர்கள். அணிந்த பின்னர் உங்களுக்கான பாராட்டுக்கள் உறுதியாகி விடும்.

Tags :
|