Advertisement

காசுமாலையை தவிர என்னென்ன மாலைகள் உள்ளன தெரியுமா ?

By: Karunakaran Mon, 09 Nov 2020 1:56:10 PM

காசுமாலையை தவிர என்னென்ன மாலைகள் உள்ளன தெரியுமா ?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. மல்லிகை அரும்பு மாலை என்பது தங்க செயினில் தங்க குண்டுகள் கோர்க்கப்பட்டு, ஒவ்வொரு குண்டிலிருந்தும் ஒரு மல்லிகை மொட்டானது நீட்டிக் கொண்டிருக்க, குண்டையும் மல்லிகை அரும்பையும் இணைக்கும் இடத்தில் பெரும்பாலும் சிறிய சிவப்பு கல்லானது பதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.

பாரம்பரிய நகை வகைகளில் மாங்கா மாலையும் இடம்பெறும். பிளெயின் மாங்கா மாலை, கற்கள் பதித்த மாங்கா மாலை, ஒவ்வொரு மாங்காயின் மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பது, மாங்கா மாலையில் பெரிய பதக்கங்கள் வைத்தது போல் வருவது, சிவப்பு மற்றும் பச்சைக்கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் சிவப்பு கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் வெள்ளை கற்கள் பதித்து செய்த மாங்கா மாலை என பல உள்ளன. மாங்காய் மாலைகளின் முடிவில் இரண்டு மயில்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போல் இருக்க அதன் நடுவிலிருந்து தொங்கும் அகலமான பென்டேன்டுகளின் கீழே தொங்கும் தங்க குண்டுகள் மாங்கா மாலைக்கு கூடுதல் அழகை தருகின்றன.

garlands,cashews,jewels,womens ,மாலைகள், காசுமாலை, நகைகள், பெண்கள்

பழைய கால நகையாக மட்டுமல்லாமல் இன்றும் அனைவராலும் விரும்பி அணியப்படும் நகை என்றால் அது காசுமாலையாகத்தான் இருக்கும். காசு மாலைகள் குறைந்த பவுனிலும் மிகவும் பார்வையாக கிடைக்கின்றன. ராமர், லட்சுமணர் மற்றும் சீதையுடன் இருப்பது போன்ற காசுகளால் செய்யப்பட்ட மாலையானது சந்திர வடிவ டாலர்கள் வைத்தும், டாலர்கள் இல்லாமலும் கிடைக்கின்றன. ஒரே காசுமாலையில் இருபுறமும் முகப்புகள் வைத்து வருபவை நவீனமாகவும் அழகாகவும் உள்ளன.

கருப்பு நிற மணிகளுடன் தங்க குண்டுகள் கோர்த்து செய்யப்படும் கருகமணி மாலைகளை பெரும்பாலும் திருமணம் முடித்த பெண்களே அணிகிறார்கள். இவை மட்டுமல்லாது புலி நக மாலைகள், நாகப்பட மாலை, பாலைக்கா மாலை, தங்க குண்டு மாலை, கொடி மாலை, முத்து மாலைகள், பவள மாலைகள் என மாலைகளில் பல வகைகளும் டிசைன்களும் உள்ளன. அடுக்கடுக்காக கோர்க்கப்பட்டு வரும் மகிழம்பூ மாலையானாது மிகவும் அழகாகவும், நுணுக்கமான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டு இருக்கின்றன. பாலைக்கா மாலை என்பது சதுரவடிவிலிருக்கும் பச்சை கற்களை தங்கத்தில் பதித்து செய்யப்படுவதாகும்.

Tags :
|