Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • கருமை நிறம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ உங்க கிட்ட இதெல்லாம் இருக்கானு பாருங்க!

கருமை நிறம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ உங்க கிட்ட இதெல்லாம் இருக்கானு பாருங்க!

By: Monisha Mon, 21 Dec 2020 4:40:31 PM

கருமை நிறம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ உங்க கிட்ட இதெல்லாம் இருக்கானு பாருங்க!

நிறங்களில் எத்தனை வகைகள் இருந்தாலும் கருப்பின் மீதான ஈர்ப்பு என்பது யாராலும் விவரிக்க முடியாத ஒன்றாகும். நம்மை வசீகரமானவராக மாற்றி விடும் மாய சக்தி கருப்பு நிறத்திற்கு உண்டு. இந்த பதிவில் கருமை நிறத்தை விரும்பும் ஒவ்வொரு ஸ்டைலிஷ் பெண்மணியின் வார்ட் ரோபிலும் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களை பார்ப்போம்

ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கருப்பு நிற டாப்ஸ் நிச்சயம் இருக்கும். எந்த உடையைப் போடுவது என்கிற குழப்பத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்களுக்கு இந்த கருப்பு டாப்ஸ் கைகொடுக்கும். இதை அணியும்போதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது அதற்கு பொருத்தமான ஆபரணம் அணிவது மட்டும்தான். கழுத்தோடு போடக் கூடிய வகையில் மெல்லிய சங்கிலிகள் அல்லது வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களை அணிவது உங்கள் அழகைக் கூடுதலாக்கும்.

dark color,beauty,tops,handbag,cellphone ,கருமை நிறம்,அழகு,டாப்ஸ்,கைப்பை,செல்போன்

நீங்கள் எந்த நிற உடையணிந்தாலும் இந்தக் கருப்பு நிறக் கைப்பை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஆகவே அநேகமான பெண்கள் பயன்படுத்துவது இந்தக் கருப்பு நிறக் கைப்பைகளைத் தான். அதனை உங்களுக்கே உரித்தான வகையில் ஸ்டையில் செய்து கொள்ளுங்கள்.

நம் கையில் இருக்கும் செல்போன் நம்முடைய இன்னொரு முகமாக பிரதிபலிக்கும். அதனால்தானோ என்னவோ பெண்கள் அனைவரும் கருப்பு நிற செல்போன்களை விரும்பி வாங்குகின்றனர். எந்த போனை வாங்குவது என்கிற குழப்பம் இருந்தால் ஒப்போ F 3 ரக கருப்பு நிற போன் உங்களுக்கு கை கொடுக்கும். இதில் உள்ள 16 எம்பி செல்ஃபி கேமரா உங்களை அழகாக செல்ஃபீ எடுக்க உதவும்.

என்னதான் விலை உயர்ந்த ஜீன்ஸ் உங்கள் வார்ட் ரொபின் இருந்தாலும் உங்களிடம் நிச்சயம் நான்கைந்து ஜோடியாவது கருப்பு நிற ஜெகின்ஸ் இருக்கும். ஒவ்வொரு நிற டாப்ஸ்களோடும் விதம் விதமான கிராப் (crop) டாப்களோடும் இந்தக் கருப்பு நிற ஜெகின்ஸ் அணியும்போதெல்லாம் நீங்கள் ஒரு தேவதையாக மாறிப் போயிருப்பது உறுதி.

dark color,beauty,tops,handbag,cellphone ,கருமை நிறம்,அழகு,டாப்ஸ்,கைப்பை,செல்போன்

வெயிலோ குளிரோ உங்கள் அழகிய கண்களை நேரடி வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்வது அவசியம். அதற்காக குளிர்கண்ணாடிகள் அவசியம் அணிய வேண்டும். அது கருமை நிறத்தில் இருந்து விட்டால் உங்கள் தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தில் நீங்களே மயங்கி விடுவீர்கள் !

ஒரு முறையான மீட்டிங்கோ அல்லது உங்கள் தோழிகளுடனான இரவு நேர அவுட்டிங்கோ நீங்கள் நிச்சயம் இந்த பென்சில் பிட் கருப்பு நிற ஸ்கர்ட்டை அணிய வேண்டும். இந்த வகை ஸ்கர்ட்டோடு நீங்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் டாப்ஸ் மற்றும் ஷூக்கள் அணியலாம்.

உங்களிடம் நீல நிற ஜீன்ஸ் இருக்கலாம் அல்லது சல்வார் இருக்கலாம். எதனோடும் சேரும்படிக்கு ஒரு கருப்பு நிற குர்தா இருப்பது அவசியம். இதனை நீங்கள் காலேஜிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ அணிந்து கொள்ள வேண்டிய தருணங்கள் நிச்சயம் வரும். ஆகவே உங்கள் வார்ட்ரோபில் இந்தக் கருமை நிற குர்தா அவசியம் இருக்கட்டும்.

Tags :
|
|