Advertisement

இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள்

By: Karunakaran Mon, 16 Nov 2020 09:14:21 AM

இந்திய-மேற்கத்திய இணைவுடன் வரும் ஆடைகள்

எம்பிராய்டரி ட்யூனிக்ஸ் என்பது தனித்துவமான மேற்கத்திய அமைப்புடன் விதவிதமான இந்திய எம்பிராய்டரி டிசைன்களை ஆடைகளில் கொண்டுவரும் அதாவது, சுருக்கமாக சொல்வதென்றால் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்த்திகள், டாப்புகள் என்றும் சொல்லலாம். பழமையான இந்திய கலைகளில் ஒன்றான இந்த எம்பிராய்டரி வேலைப்படானது இந்தியாவின் பல பகுதிகளிலும் அங்கு வாழும் மக்களால் அவர்களின் தனிச்சிறப்புகளோடு செய்யப்பட்டு வருகிறது.

எம்பிராய்டரி ட்யூனிக் மேலாடைகள் (டாப்ஸ்) : எம்பிராய்டரியானது பொதுவாக டாப்புகளில் கழுத்திற்கு அருகிலிருந்து மெல்லியதாகவோ அல்லது பெரிய பேட்ச் வேலை போல் மார்பு முழுவதும் மறைப்பது போலவோ பரவியிருக்கும். எம்பிராய்டரி டிசைன்கள் கம்பீரமான தோற்றத்தை தருவதாக இருக்கும். அதிக முறையான அல்லது ஆடம்பரமான ஆடைகளிலும் கூட முழுத்துணியிலும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

dresses,indo-western,kurthis,embroid ,ஆடைகள், இந்தோ-வெஸ்டர்ன், குர்திஸ், எம்பிராய்டரி


சிக்கன்காரி, காந்த்தா, பூல்காரி, ஜர்தோசி, ராஜஸ்தானி பேட்ச் வேலைப்பாடு, கஷிதாகாரி, ஆரி, கோட்டா, கசூத்தி, கட்ச் அல்லது அரிபாரத், சிந்தி தையல், கஷ்மீரி, முகேஷ், பிச்வாய், பிப்லி, ராபரி சிக்வின், குரோஷா மற்றும் தோடா என பலவகையான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் துணிகளில் செய்யப்படுகின்றன. எளிமையான எம்பிராய்டரி முதல் மிகவும் கடினமான எம்பிராய்டரிகளுடன் குர்த்திகளும், டாப்புகளும் கிடைக்கின்றன.

எம்பிராய்டரி வகைகள் :
ரேஷம் எம்பிராய்டரி, சீஸா வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, லேஸ் டிசைன்கள் மற்றும் வெல்வட் பேட்ச் வேலைப்பாடுகளும் ட்யூனிக்குகளில் செய்யப்படுகின்றன. பிராந்திய எம்பிராய்டரி பாங்குகளான ஆரி, பூட்டி, கசூத்தி, கஷின்டா மற்றும் பூல்காரி எம்பிராய்டரிகளால் பெரும்பாலும் ட்யூனிக்குகள் அலங்கரிக்கப்படுகின்றன. இதுபோன்ற மிக நுண்ணிய மற்றும் சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் ட்யூனிக் டாப்புகளுக்கு கூடுதல் அழகை தருகின்றன.

dresses,indo-western,kurthis,embroid ,ஆடைகள், இந்தோ-வெஸ்டர்ன், குர்திஸ், எம்பிராய்டரி

டிசைனர் அல்லது பார்ட்டிக்கு அணியக்கூடிய ட்யூனிக்குகளில் ஒரு தனிப்பட்ட மாதிரியை உருவாக்க வேறுபட்ட நுட்பங்களை இணைத்தும் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது. பட்டு நூல்களினால் செய்யப்படும் பூ வேலைப்பாடுகளின் உள்ளே அல்லது சீஸாக்களை கொண்டு செய்யப்படும் பேட்ச் பார்டர் மாதிரிகளுக்கு சீக்வின்ஸ் எம்பிராய்டரியை பயன்படுத்துகிறார்கள். மிகவும் மெல்லிய துணிகளில் பெரும்பாலும் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்படுவதில்லை.

காட்டன் மற்றும் ஆர்ட் சில்க் துணிகளில் தயாரிக்கப்படும் எம்பிராய்டர்ட் ட்யூனிக்குகள் தினசரி அணிவதற்கும், ஜியார்ஜெட், கிரேப், டியூபியன் சில்க் மற்றும் டஸ்சர் சில்க் துணிகளில் தயாரிக்கப்படும் எம்பிராய்டர்டு ட்யூனிக்குகள் பார்ட்டிகள் மற்றும் வெளியில் அணிந்து செல்வதற்கும் ஏற்றவையாகும்.

Tags :