Advertisement

பெண் குழந்தைகளுக்கான எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள்

By: Karunakaran Fri, 16 Oct 2020 7:29:22 PM

பெண் குழந்தைகளுக்கான எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள்

பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பார்ட்டி உடைகளில் கவுன்களும், லாங் ஃப்ராக்குகளும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
ஒன் ஷோல்டர் சீக்வின் எம்பிராய்டர்டு கவுன்கள்:
இந்த கவுன்களில் இருக்கும் ஒரு கைக்கும், கவுனின் கீழ்புறம் சுற்றிலும் ஃபிரில்கள் இணைக்ககப்பட்டு, இடுப்புப் பகுதியில் லேசானது இணைக்கப்பட்டு, ஜிப்பானது பக்கவாட்டில் பொருத்தப்பட்டு, பூக்கள் சீக்வின் எம்பிராய்டரி வேலைப்பாடு உடல் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கவுன்கள் மென்மையான நிறங்களில் பார்ப்பதற்கு அம்சமாகவும், அழகாகவும் உள்ளன.

விஸ்கோஸ் எம்பிராய்டரி நெட் கவுன்கள் : இந்த கவுன்கள் பெரும்பாலும் நெட்டட் முழுக்கைகள் அல்லது கைகளே இல்லாமலும் வடிவமைக்கப்படுகின்றன. மார்பிலிருந்து கழுத்துப்பகுதியானது நெட்டட் துணியில் கழுத்தைச்சுற்றிலும் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் தைக்கப்பட்டுள்ளன. உடலின் மேற்பகுதியில் கவுனானது உடலைப் பிட்டித்தவாறு சிக்கென்றும் இடுப்பிலிந்து குதிங்கால் வரை ஃப்ளேர்களுடனும், ஷேட்டின் துணியின் மேல் நெட்டில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மற்றொரு லேயரானது இணைக்கப்பட்டு மிகவும் பிரமாதமாக காட்சியளிக்கின்றது.

ethnic clothes,girls,party clothes,gowns ,இன உடைகள், பெண்கள், கட்சி உடைகள், கவுன்

ஸ்லீவ்லெஸ் கவுன்களுடன் வரும் போன்ச்சோ : ஷேடின் அல்லது சில்க் துணியில் கைகளில்லாமல் எளிமையான டிசைன்களில் தைக்கப்படும் கவுன்களின் மேலே கழுத்திலிருந்து மார்பு வரை மறைக்கும் மேலாடையே போன்ச்சோ என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை போன்ச்சோக்கள் பலவித வண்ணங்களில் தனியாகவும் விற்கப்படுகின்றன.
ஹால்ட்டர் கழுத்துடன் வரும் கவுன்கள் : இவை பார்ட்டிகளுக்கும், வரவேற்பு விழாக்களுக்கும் அணிய ஏற்றவையாக இருக்கும். இவ்வகை ஆடையில் மார்பிலிருந்து கணுக்கால் வரை உட்புறம் லைனிங் கொடுத்து மேற்புறம் உள்ள துணியானது வயிற்றுப்பகுதியிலிருந்து ‘A’ வடிவில் பிரிந்து பின்புறம் தரையில் புரள்வது போல் மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இடுப்பை இருக்கி பிடிக்கும் விதமாக அழகிய இடுப்பு பட்டைகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஷாப்ஃப் குர்த்தி மற்றும் டோத்தி சல்வார் : இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற நவீன இணைவு உடை என்று சொல்லலாம். இது நவநாகரீகமாகவும் அதே சமயம் பாரம்பரியமான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளது. மேலாடையானது ஸ்லீவ்ரெஸ் ஷார்ட் குர்த்தி அதன் கீழ்புறம் ஃபிரில்கள் வைத்து பார்க்க அழகாக உள்ளது.
டங்கரீஸ்: இது சாதாரணமான அதே சமயத்தில் நேர்த்தியான உடையாக உள்ளது. இவை சாதாரண துணிகளிலும் பெரும்பாலும் டெனிம் துணிகளிலும் கிடைக்கின்றன. இவை பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இருபாலரும் அணிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஃப்ளவர் டிரஸ்:- இவை ட்யூலி ரகத்துணியால் வடிவமைக்கப்படும் ஆடையாகும். இந்த ஃப்ராக்கில் கைகளில்லாமல் வெறும் தோள்பட்டையை மறைப்பது போல் லேஸ் துணிகளில் மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன இடுப்பை சுற்றிலும் அழகிய கற்கள் பதித்தோ அல்லது தோள்பட்டையில் இருக்கும்.

Tags :
|