Advertisement

மழைக்காலத்தில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாட பேஷன் டிப்ஸ்!!

By: Monisha Thu, 22 Oct 2020 12:42:41 PM

மழைக்காலத்தில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாட பேஷன் டிப்ஸ்!!

நவராத்திரி சமயத்தில் பருவ மழைக்காலம் முடியாத காரணத்தால் விழாவுக்கு எந்த புதிய ஆடையை தேர்ந்தெடுக்க என்பதில் மிகப்பெரிய குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளீர்கள் . எந்த ஆடையை தேர்ந்தெடுத்தாலும் மழையால் பாழாகி விடுமோ இப்போ என்ன செய்வது என்ற எண்ணம் தான் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். எனவே உங்கள் அழகான மயக்க வைக்கும் ஸ்டைல்கள் எல்லாம் இந்த பூஜை கொண்டாட்டத்தின் போது பாழாகி விடும் என்ற வருத்தம் இருக்கா? கவலையே வேண்டாம். மழையிலும் ஜொலிக்க சூப்பர் ட்ரிக்ஸ்!

பூஜை கொண்டாட்டத்தின் போது வெஸ்டர்ன் மற்றும் நம்ம கலாச்சார ஸ்டைலையும் காட்டனும்னா நீங்க 3/4 நீளமுள்ள குளோட்ஸ் மற்றும் கேப்ரிஸ் பேண்ட் பயன்படுத்துங்கள். அப்பொழுது மழை பெய்து நீங்கள் முழுக்கால் பேண்ட் போட்டு சென்றால் எல்லாம் பாழாகி விடும். இதுவே குட்டை பாவாடை போட்டு சென்றால் உங்களுக்கு செளகரியமாக இருக்காது. எனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் பூஜை கொண்டாட்டத்திற்கு 3/4 நீளமுள்ள பேண்ட் மிகவும் சிறந்தது.

rainy season,navratri,fashion,beauty,western ,மழைக்காலம்,நவராத்திரி,பேஷன்,அழகு,வெஸ்டர்ன்

பருவ மழைக்காலம் என்பதால் அடர்ந்த பளிச் நிறக் கலர்களான உடை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எனவே கண்டிப்பாக பளிச்சென்ற நிற உடைகளை தேர்வு செய்யுங்கள். இந்த ஆடைகள் அந்த இருண்ட சூழலில் அழகாக ஜொலிக்கும். மேலும் லைட்டான கலர் உடைகள் மழையில் சகதி அழுக்கால் பாழாக வாய்ப்புள்ளது. கொஞ்சம் சகதி பட்டால் கூட தெளிவாக அசிங்கமாக தெரியும். எனவே இந்த மழைக்கால துர்கா பூஜைக்கு அடர்ந்த நிற உடைகளே நல்லது.

ஃப்ளோரி போன்ற தரையை தழுவும் ஆடைகள் புதிய ட்ரெண்ட்டாக இருந்தாலும் பருவ மழைக்காலத்திற்கு ஏற்றது அல்ல. பூஜையின் போது மழை வந்தாலோ அல்லது முன்னாள் இரவே மழையில் நனைந்து சகதியால் பாழாகி இருந்தாலோ உங்களுக்கு தான் கஷ்டம். அதை கஷ்டப்பட்டு துவைப்பது மட்டுமில்லாமல் உங்கள் விருப்பமான உடை பாழாகி போனதே என்ற கவலையும் உங்களை தொற்றிக் கொள்ளும்.

rainy season,navratri,fashion,beauty,western ,மழைக்காலம்,நவராத்திரி,பேஷன்,அழகு,வெஸ்டர்ன்

இந்த துர்கா பூஜைக்கு சிறந்த உடை என்றால் அது புடவை தான். ஆனால் என்ன மழை வந்துவிட்டால் புடவை கட்டிக் கொண்டு உங்களால் சமாளிக்க முடியாது. காட்டன் புடவை ரெம்ப கனமாக இருப்பதால் உங்களால் சகதிக்குள் இழுத்து நடக்க முடியாது. ஆனால் பிடிச்ச உடை இதுவாக இருந்தால் உங்களுக்கு செளகரியமான மற்றும் லேசான புடவைகளை சற்று தரையை தொடாதபடி உயர்த்தி அணிந்து கொண்டு பூஜைக்கு செல்லலாம். ரெம்ப நேரம் நகர்ந்து கொண்டே இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து புடவையில் பூஜையை ரசித்தால் நீங்கள் தேவதை மாதிரி இருப்பீர்கள்.

குடை உங்கள் ஸ்டைலின் ஒரு பாகமாக இல்லாவிட்டாலும் உங்கள் மழைக்கால கொண்டாட்டத்திற்கு கண்டிப்பாக பயனளிக்கும். அடர்ந்த நிற குடைகளை உங்கள் உடைக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தினால் ஸ்டைலாகவும் பயனளிக்கும் விதமாகவும் இருக்கும்.

rainy season,navratri,fashion,beauty,western ,மழைக்காலம்,நவராத்திரி,பேஷன்,அழகு,வெஸ்டர்ன்

இந்த மழைக்கால கொண்டாட்டத்தில் லெதர் ஷூ மற்றும் பேக்கை அணிந்து செல்வது சரியானது அல்ல. ஏனெனில் லெதர் பொருள் தண்ணீருடன் வினைபுரியக் கூடியது. உங்கள் பேக் குடைக்குள் இருப்பதால் பாதிப்பு இல்லாவிட்டாலும் உங்கள் ஷூ மழையால் கண்டிப்பாக பாதிக்கப்படும். அதே மாதிரி துணியால் ஆன காலணிகளையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவைகள் எளிதில் மழையில் நனைந்து ஈரப்பதம் மிக்கதாக மாறி விடும். எனவே பாலிதீன் வகையான காலணிகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். எந்த வித சிரமமும் இல்லாமலும் ஒய்யாரமாக நடக்கலாம்.

ப்ளிப் பிளாப்ஸ் செப்பல்கள் தட்டையாக இருப்பதால் எளிதில் சகதி உங்கள் கால்களில் பட வாய்ப்புள்ளது. எனவே மழைக்கால துர்கா பூஜை அன்று இந்த மாதிரி தட்டையான காலணிகளை தவிர்ப்பது நல்லது. மேலும் உங்கள் அழகான ஆடையையும் இந்த காலணி சகதி தெறித்து பாழாக்கி விடும். நல்லா மூடிய அமைப்பை கொண்ட ஷூ வை பயன்படுத்துங்கள். இது உங்களை சகதியிலிருந்து காப்பதோடு உங்கள் ஆடையையும் அழுக்காக மாற்றாது. இந்த மழைக்காலத்திலும் துர்கா பூஜையை குதூகலத்துடன் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கொண்டாடுங்கள்!

Tags :
|