Advertisement

இந்தியாவில் மிகவும் பிரபலமான புடவை வகைகளை தெரிந்துகொள்வோம்!

By: Monisha Fri, 18 Sept 2020 12:44:38 PM

இந்தியாவில் மிகவும் பிரபலமான புடவை வகைகளை தெரிந்துகொள்வோம்!

இந்தியா பாரம்பரிய உடை என்றால் அது புடவை தான். எவ்வளவு தான் பெண்கள் ஃபேஷனானவர்களாக இருந்தாலும், புடவைகளை அணிந்தால், அவர்கள் மங்களகரமாக காணப்படுவார்கள். அதுமட்டுமின்றி ஜீன்ஸ், டி-சர்ட் என்று எந்த ஒரு ஃபேஷனான ஆடைகளும், புடவைகளின் முன்பு தோற்றுவிடும். ஏனெனில் அந்த வகையில் புடவைகளிலேயே பல வெரைட்டிகள் உள்ளன.

மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான புடவைகள் பிரபலமாக மக்கள் மத்தியில் உள்ளன. உதாரணமாக, பெங்காலியில் ஜாம்தானி வேலைபாடுகளுடன் கூடிய புடவைகள் பிரபலமானது. அதுவே அவுரங்காபாத்தில், பைத்தானி புடவையில் உள்ள தங்க நூல் வேலை மிகவும் பிரபலமானது. இவ்வாறு இந்தியாவில் பல வகையான புடவைகள் உள்ளன. அதுவும் எண்ண முடியாத அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகளை பார்ப்போம்!

1. காஞ்சிபுரம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பட்டு புடவை மிகவும் பிரபலமானது. அதிலும் இந்த காஞ்சிபுரத்தில் திருமண முகூர்த்தப் பட்டுக்கள் எண்ணற்ற டிசைகளில், அழகான பார்டருடன், வித்தியாசமான நிறங்களில் இருக்கும்.

2. டாக்காய்
இந்தியாவின் வங்காளத்தில் இருக்கும் டாக்காவில் தயாரிக்கப்பட்டது தான் டாக்காய் காட்டன் புடவைகள். ஆனால் தற்போது ஜாம்தானி வேலை உள்ள சுத்தமான காட்டன் புடவைகள் கூட மிகவும் பிரபலமாக உள்ளது.

india,tradition,fashion,sarees,beauty ,இந்தியா,பாரம்பரியம்,பேஷன்,புடவைகள்,அழகு

3. பைத்தானி
மஹாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது பைத்தானி புடவைகள். இந்த புடவைகளின் சிறப்பு என்னவென்றால், இதில் உண்மையான தங்க நூல் கொண்டு வேலைபாடுகள் செய்யப்பட்டிருப்பது தான்.

4. சாம்பல்புரி
சாம்பல்புரி ஸ்டைலில் சில்க் மற்றும் காட்டன் என இருவகையான புடவைகளும் உள்ளன. மேலும் இந்த புடவையில் உள்ள சிறுசிறு எம்பிராய்டரியும், ஒரிசாவில் உள்ள சாம்பல்பூரில் இருந்து வந்தது.

5. கேரள புடவை
கேரளா புடவையின் சிறப்பு என்னவெனில், இதில் சந்தன நிற பட்டுப் புடவையில், தங்க நிற பார்டர் மட்டும் இருப்பது தான்.

6. அஸ்ஸாம் புடவை
இந்தியாவிலேயே அஸ்ஸாமில் தான் சுத்தமான சில்க் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு தங்க நிற மோகா சில்க் மற்றும் அதன் தனித்துவமான நூல் வேலை தான் மிகவும் பிரபலமானது.

india,tradition,fashion,sarees,beauty ,இந்தியா,பாரம்பரியம்,பேஷன்,புடவைகள்,அழகு

7. பனாரஸ் புடவை
பனாரஸ் புடவை, அதன் நிறம் மற்றும் அதிகமான தங்க நிற எம்பிராய்டரியால் மிகவும் பிரபலமானது. மேலும் இது வட இந்திய திருமண பட்டு புடவைகளில் மிகவும் பிரபலமானது.

8. பொச்சம்பள்ளி
காட்டன் புடவைகள் என்று வரும்போது, பொச்சம்பள்ளி புடவைகளும் அடங்கும். இந்த புடவைகளின் நிறங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

9. கோடா புடவை
கோடா புடவையின் சிறப்பு என்னவென்றால், அந்த புடவைகளின் முனைகளில் சிறப்பான ஜரிகை இருக்கும். இது ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தது.

10. சந்தேரி
இது ஒருவிதமான சில்க் புடவை. இந்த புடவையானது மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமான மற்றும் அழகான கலைநயத்துடன் காணப்படும் ஒரு புடவையாகும்.

india,tradition,fashion,sarees,beauty ,இந்தியா,பாரம்பரியம்,பேஷன்,புடவைகள்,அழகு

11. பொம்கை
ஒரிசா புடவை தயாரிப்பதில் மிகவும் சிறந்த மாநிலம் என்று சொல்லலாம். ஏனெனில் இங்குள்ள மற்றொரு சிறிய கிராமமான பொம்கையில் கைத்தறி புடவைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த புடவையும் மிகவும் பிரபலமானதே.

12. டாண்ட்
நல்ல காட்டன் புடவை வேண்டுமெனில், வங்காளத்தில் உள்ள டாண்ட் புடவை சிறந்ததாக இருக்கும். இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், இது எப்போதும் கஞ்சி போட்டது போல் நேராகவே இருக்கும்.

13. கோட்டா
பொதுவாக கோட்டா புடவைகளானது காட்டனால் செய்யப்பட்டது. இந்த புடவை ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரத்தில் இருந்து வந்தது. இந்த புடவையானது வீட்டில் இருக்கும் போது உடுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

14. கோட்கி
ஒரிசாவில் இருந்து வந்தது தான் கோட்கி புடவை. இந்த புடவையின் முந்தானையில் அழகான கோவில் பாணியில் வேலை செய்யப்பட்டிருக்கும்.

Tags :
|
|