Advertisement

டீன் ஏஜ் ட்ரெண்டிங் ஆடை வகைகளை தெரிந்து கொள்ளுங்கள்!!

By: Monisha Thu, 20 Aug 2020 2:26:00 PM

டீன் ஏஜ் ட்ரெண்டிங் ஆடை வகைகளை தெரிந்து கொள்ளுங்கள்!!

அனைவர் இதயத்திற்குள்ளும் நாம் நுழைய வேண்டும் என்றால் நம் அழகிற்கேற்ற ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டியது மிக முக்கியம். உங்களை அழகாக்கிக் கொள்ள சில டீன் ஏஜ் ட்ரெண்டிங் ஆடை வகைகளை உங்களுக்காக தேர்வு செய்து இந்த பதிவில் கூறியுள்ளோம் அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள்
பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள் இப்போதைய பேஷன் ஆகியிருக்கிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை இதுதான். மழையும் குளிரும் வெயிலும் என என்னவாக இருந்தாலும் சரி எல்லா காலத்திலும் அணிய சௌகரியமான ஆடை பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள்.இதனை எந்த விதமான டாப் உடனும் நீங்கள் பொருத்திக் கொள்ளலாம்.

teenage,trending,clothing,fashion,design ,டீன் ஏஜ்,ட்ரெண்டிங்,ஆடை,பேஷன்,டிசைன்

போல்கா டாட் உடைகள்
போல்கா வகை உடைகள் இன்றைக்கு மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லோராலும் விரும்பப்படும் அழகான உடை. இதனை எந்த வயதினரும் அணிய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். யார் அணிந்தாலும் அவர்கள் வயதைக் குறைத்து அழகை அதிகரித்துக் காட்டும் தன்மை உடையது போல்கா டாட் உடை.

ஜம்ப் சூட்கள்
எல்லாவிதமான சூழ்நிலைக்கும் பொருத்தமானதாக ஒரு ஆடை வேண்டும் என்றால் அது ஜம்ப் சூட் தான். பார்ட்டியா, சாதாரண நாளா எல்லாவற்றிலும் உங்களையே உற்று நோக்க வைக்கும் ஒரு ஆடைதான் ஜம்ப் சூட். ப்ளேசர் அல்லது ஸ்னீக்கர் இதற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.

teenage,trending,clothing,fashion,design ,டீன் ஏஜ்,ட்ரெண்டிங்,ஆடை,பேஷன்,டிசைன்

மஞ்சள் நிற ஆடைகள்
இந்த வருடத்தின் பேஷன் நிறமாக மஞ்சள் மாறியிருக்கிறது. வெஸ்டர்ன் அல்லது எத்னிக் என எந்த விதமான வகையிலும் இந்த நிறத்தில் நீங்கள் ஆடைகள் அணிந்தால் கவனிக்கப்படுவீர்கள். பூக்கள் நிறைந்த மஞ்சள் ஆடை இந்திய சரும நிறத்துடன் ஒத்து போகும் என்பதால் ஒருமுறை அணிந்து பாருங்கள் அதன் மேன்மையை.

ஷிம்மர் உடைகள்
ஷிம்மர் உடைகள் வெப்ப நாட்டிற்கு ஏற்ற ஆடைகளில் ஒன்று. மிக எளிமையாக அதே சமயம் ஷைனிங் லுக் தேவைப்படுபவர்களுக்கு இந்த ஆடை பொருத்தமானது. அதற்கு மிக சரியான காலணி அணிவது உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும்.

Tags :