Advertisement

எல்லா பெண்களும் பார்க்க வேண்டுமா? ஆண்களே உங்கள் உடையில் கவனம் தேவை!

By: Monisha Sun, 01 Nov 2020 4:40:06 PM

எல்லா பெண்களும் பார்க்க வேண்டுமா? ஆண்களே உங்கள் உடையில் கவனம் தேவை!

ஆண்கள் பலரும் சினிமா படங்களை பார்த்து அதே போன்று உடை அணிவது என பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இப்படி செய்வதினால் பெண்களுக்கு உங்களை பிடிக்கும் என்று நினைகிறீர்களா ஆண்களே? நிச்சயமாக 75 சதவீதம் பெண்களுக்கும் பிடிக்க வாய்ப்பில்லை. ஆண்களே உங்களை எல்லா பெண்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்போ இதை பாலோ பண்ணுங்க!

சிலர் உடையில் அதிகமாக ஸ்டைல் காட்டுகிறேன் என்று நினைத்து பார்ட்டி வியர் ஷர்ட், ஜாகர் பேன்ட், கால்களில் பளிச் நிற ஸ்னீக்கர்ஸ் என்று போட்டு வெளியில் வருகின்றனர். இது கண்டிப்பாக நிறைய பெண்களுக்கு பிடிக்காது. இதமான நிறங்களில் தரமான சட்டை, ஜீன்ஸ் அல்லது காட்டன் பேன்ட் என்று இயல்பாக இருக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.

உடையை தேர்வு செய்யும் போது உங்களுக்குப் பொருந்த கூடிய உடைகளை தேர்வு செய்து அணியுங்கள். அதற்காக ட்ரெண்டு என்று சொல்லி ஜாகர் பேன்ட், செக்டு பேன்ட் என்று கிடைப்பதையெல்லாம் வாங்கிப் போட்டுக்கொள்ளாதீர்கள்.

fashion,style,party wear,sneakers,designs ,பேஷன்,ஸ்டைல்,பார்ட்டி வியர்,ஸ்னீக்கர்ஸ்,டிசைன்கள்

அது உங்கள் அழகை கெடுத்து விடும். ஜீன்ஸ், காட்டன் பேன்ட், லினன் காட்டன் பேன்ட் என ரெகுலராக உடுத்தக்கூடிய பேன்ட் வகைகளிலேயே அப்டேட் ஆகியிருக்கும் கேரட் ஃபிட் பேன்ட், டெக்ஸ்ச்சர்டு டிசைன்கள் என விதவிதமாக தேர்வு செய்யுங்கள்.

சட்டைகளில் ப்ளைன், செக்டு, ஃப்ளோரல் என அனைத்துமே அனைவருக்கும் பொருந்தும். ஆனால், இவற்றில் கண்களை உறுத்தாத வித்தியாசமான நிறங்கள் மற்றும் டிசைன்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நீங்கள் இயல்பாகவும் தனித்தும் தெரிவீர்கள்.

குறிப்பாக, டார்க் நிற பேன்ட்களுக்கு லைட் கலர் சட்டைகளையும், லைட் கலர் பேன்ட்களுக்கு டார்க் அல்லது மீடியம் டார்க் கலர் சட்டைகளையும் அணிவது நல்லது. எக்காரணம் கொண்டும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே நிறத்தில் சட்டை மற்றும் பேன்ட்களை அணியாதீர்கள்.

Tags :
|