Advertisement

காஸ்ட்யூமிற்கு ஏற்றவாறு ஷோக்கர் நெக்லஸ் தேர்ந்தெடுப்பது எப்படி?

By: Monisha Sat, 17 Oct 2020 3:12:53 PM

காஸ்ட்யூமிற்கு ஏற்றவாறு ஷோக்கர் நெக்லஸ் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஷோக்கர் நெக்லஸ் பாரம்பரிய உடைகளுக்கும் வெஸ்டர்ன் காஸ்ட்யூமிற்கும் பொருத்தமாக இருக்கும். இந்த நகை நவராத்திரி பெண்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. உங்களுக்கு நல்ல அகலமான கழுத்து இருந்தால் இந்த ஷோக்கர் நெக்லஸ் உங்களுக்காக செய்யப்பட்டதாக இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஷோக்கர் நெக்லஸ் உங்கள் ஆடைகளுக்கு பொருத்தமாக அமைய வேண்டும். இந்த நெக்லஸ் சில குறிப்பிட்ட ஆடைகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் அது உங்கள் அழகை கெடுத்துவிடும். எனவே வெஸ்டர்ன் காஸ்ட்யூமிற்கும் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளுக்கும் எந்த மாதிரியான ஸ்டைலில் ஷோக்கர் நெக்லஸ் அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்!

ட்ரெடிஷனல் ஷோக்கர்
முத்துக்கள் வைத்த டெடிஷினல் ஷோக்கர் நெக்லஸ் அகலமான கழுத்துள்ள ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். இந்த முறையில் டெடிஷினல் நெக்லஸ் அணிந்து சென்றால் கண்டிப்பாக உங்கள் அழகில் எல்லாரும் மெய் மறந்து விடுவார்கள்.

costume,shocker necklace,traditional style,western,fashion ,காஸ்ட்யூம்,ஷோக்கர் நெக்லஸ்,பாரம்பரிய உடை,வெஸ்டர்ன்,பேஷன்

ட்ரைபல் ஷோக்கர்
ட்ரைபல் ஷோக்கர் பார்ப்பதற்கு சாதரணமாக இருந்தாலும் உங்களுக்கு ஒரு நல்ல கிளாசிக் லுக்கை கொடுக்கும். சரிவான கழுத்துள்ள ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். இந்த நெக்லஸ் வெஸ்டர்ன் மற்றும் பாரம்பரிய ஆடைகள் இரண்டுக்குமே பொருத்தமாக இருக்கும். போகிமியான் காஸ்ட்யூமிற்கு இந்த நெக்லஸ்யை கவனமாக தேர்ந்தெடுத்து அணிந்தால் தேவதை போல் தெரிவீர்கள்.

பீட்ஸ் ஷோக்கர்
இந்த வகையான ஷோக்கர் உங்கள் வெஸ்டர்ன் மற்றும் பாரம்பரிய ஆடைகள் இரண்டுக்குமே அதன் வடிவமைப்பை பொறுத்து பொருத்தமாக இருக்கும். எல்லா வகையான பீட்ஸ் ஷோக்கரும் பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்காது. அதே மாதிரி தான் எல்லா வெஸ்டர்னுக்கும் பொருந்தாது. அகலமான கழுத்துள்ள மேக்ஸி டிரஸ் அல்லது கைகளில்லாத ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். இந்த முறையில் பீட்ஸ் ஷோக்கர் நெக்லஸ் உங்களுக்கு பொருத்தமான கிளாசிக் லுக்கை கொடுக்கும்.

costume,shocker necklace,traditional style,western,fashion ,காஸ்ட்யூம்,ஷோக்கர் நெக்லஸ்,பாரம்பரிய உடை,வெஸ்டர்ன்,பேஷன்

டைமண்ட் ஷோக்கர்
டைமண்ட் ஷோக்கர் மிகவும் விலை உயர்ந்த ஜூவல்லரி என்பதால் கூட்டம் அதிகமாக உள்ள கொண்டாட்டங்களுக்கு இதை அணிந்து செல்லாமல் இருப்பது நல்லது. நீங்கள் ஓரே இடத்தில் இருந்து கலந்து கொள்ள போறீங்கள் என்றால் இந்த ஷோக்கர் உங்களுக்கு சிறந்தது. ஸ்ஷீத் அல்லது நீண்ட மேக்ஸி ஆடைகளுக்கு இது பொருத்தமாக இருக்கும். இருப்பினும் கழுத்தில் உள்ள ஜூவல்லரியில் மிகவும் கவனம் தேவை.

ப்ளோரல் ஷோக்கர்
இந்த வகையான நெக்லஸ் துணி, வயர் மற்றும் லேஸ் வைத்து தயாரிக்கின்றனர். இது பார்ப்பதற்கு அழகாகவும் லேஸ் வைத்த டாப்புகளுக்கு பொருத்தமாகவும் இருக்கும். இந்த நெக்லஸ் லேசான கலருள்ள ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

பேவ்ஃரிக் ஷோக்கர்
இந்த நெக்லஸ் அதிகமாக பயன்படுத்தப்படும் நெக்லஸ் ஆகும். ஆழமான கழுத்துள்ள ஆடைகளுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த நெக்லஸ்சை லூசாக அசையும் அளவிற்கு அணிய கூடாது. உங்கள் கழுத்தின் அளவிற்கு ஏற்ற மாதிரி கச்சிதமாக அணிய வேண்டும். இதை பின்பற்றினால் நல்ல ட்ரெண்ட்டான லுக்கை கொடுக்கும்.

Tags :