Advertisement

சூழலுக்கு ஏற்றவாறு ஆடைகள் தேர்வு செய்வது எப்படி?

By: Monisha Tue, 01 Dec 2020 6:13:06 PM

சூழலுக்கு ஏற்றவாறு ஆடைகள் தேர்வு செய்வது எப்படி?

பெண்களுக்கென ஏராளமான ஆடை வகைகள் உள்ளன. பெண்கள் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு ஆடையை அணிய விரும்புவார்கள். ஆனால், எந்த நிகழ்ச்சிக்கு அல்லது சூழலுக்கு எந்த ஆடையை அணிவது என்று எப்போதும் குழப்பமாகவே இருக்கும். இந்த பதிவில் சூழலுக்கு ஏற்ற வகையில் சரியான ஆடையை தேர்வு செய்வது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

திருமண நிகழ்ச்சி
திருமண நிகழ்ச்சியின் போது மனதிற்கு இதம் தரக்கூடிய நிறத்திலான புடவையையோ, தாவனியையோ அல்லது வேறு வகை விசேஷ ஆடையையோ தேர்வு செய்ய வேண்டும். மேலும் அந்த ஆடையில் டிசைன்கள் அதிகம் இல்லாமல், ரமியமான வகையில் இருப்பது நல்லது. முடிந்த வரை மிக அடர்த்தியான நிறத்தை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆடைக்கேற்ற நகைகளை அணிந்து கொள்ளுங்கள். பிறரிடம் காட்ட வேண்டும் என்பதற்காக அதிகம் அணிந்தால், அதுவே உங்கள் அழகை கெடுத்து விடக் கூடும்.

women,clothing,fashion,wedding,party ,பெண்கள்,ஆடைகள்,பேஷன்,திருமணம்,பார்ட்டி

பார்ட்டி
நீங்கள் பார்டியில் கலந்து கொள்ளும் போது, அதற்கு தகுந்த ஆடையை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக இது உங்கள் அலுவலக பார்டியா அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிகழ்த்தும் பார்டியா என்பதற்கும் ஏற்றவாறு உங்கள் ஆடையில் தேர்வு இருக்க வேண்டும். உங்கள் அலுவலக பார்டி என்றால், உங்கள் ஆடை சில கட்டுபாடுகளுடன், நாகரீகமாகவும் இருக்க வேண்டும். எனினும், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு பார்டி என்றால், உங்களுக்கு பிடித்தது போலவும், பார்பதற்கு நாகரீகமாகவும் மற்றும் அதிக ஆடம்பரம் இல்லாமல், நீங்கள் கலந்து கொள்ளும் பார்டிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

நேர்காணல்
நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ள போகின்றீர்கள் என்றால், உங்கள் ஆடை தேர்வு மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆடை ஆடம்பரமாக இருக்கக் கூடாது. எளிமையாகவும், நாகரீகமாகவும், பார்பதற்கு மரியாதைக்குரியதாகவும் இருக்க வேண்டும். மேலும் அணிவதற்கு சௌகரியாமாகவும் இருக்க வேண்டும். முற்றிலும் கவர்சியாக இருப்பதை தவிர்த்து விட வேண்டும்.

இறுதி சடங்கு
இதற்கு நீங்கள் முடிந்த வரை கருப்பு அல்லது அடர்ந்த நிற ஆடையை தேர்வு செய்ய வேண்டும். பளபளப்பாகவும், ஆடம்பரத்தை வெளிபடுத்தும் வகையிலும் இருக்கக் கூடாது. மேலும் நகை ஆபரணங்களை தவிர்க்க வேண்டும். மிகவும் எளிமையாக இருக்க வேண்டும்.

women,clothing,fashion,wedding,party ,பெண்கள்,ஆடைகள்,பேஷன்,திருமணம்,பார்ட்டி

பயணம்
நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்தினர்களுடன் பயணம் செய்யும் போதோ அதற்கு தகுந்தவாறு உங்கள் தேர்வு இருக்க வேண்டும். பயணத்தின் போது உங்களுக்கு சௌகரியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஆடையை தேர்வு செய்ய வேண்டும். முடிந்த வரை மேலும் முழுமையாக உங்கள் உடலை மறைக்கும் வகையில் இருப்பது, பயணத்தின் போது குளிர் காற்றில் இருந்து உடலுக்கு கதகதப்பு கிடைக்கும் வகையில் இருக்கும்.

குடும்ப விழாக்கள்
உங்கள் வீட்டில் அல்லது, உறவினர்கள் வீட்டில் குடும்ப விழாக்கள் நடந்தால், அதற்கு நீங்கள் பாரம்பரிய ஆடையை தேர்வு செய்யலாம். குறிப்பாக, புடவை, பாவாடை தாவணி அல்லது உங்கள் வட்டார பாரம்பரிய ஆடை. இது சற்று சுவாரசியமாகவும். உங்களுக்கு நல்ல நினைவுகளை ஏற்படுத்தும் ஒரு விழாவாகவும் அமைய உதவும். இது மட்டுமல்லாது, அனைவரும் ஒரே நிறத்திலும், ஒரே மாதிரியான ஆடைகளையும் திட்டமிட்டு தேர்வு செய்து அணியும் போது, இன்னும் மகிழ்ச்சியும், குதூகலமும் அதிகரிக்கும்.

Tags :
|