Advertisement

பெண்கள் தரமான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி ?

By: Karunakaran Wed, 02 Dec 2020 4:54:59 PM

பெண்கள் தரமான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி ?

பெண்களில் பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. உள்ளாடை மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது தான் பெண்ணுறுப்பை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைக்க உதவுகிறது. பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பெண்ணுறுப்புக்குள் நுழைவதை தடுக்கிறது. பெண்ணுறுப்பில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நமைச்சலை தடுக்கிறது.

உங்க உள்ளாடை 100% பருத்தியால் செய்யப்படவில்லை என்றால் ஈரப்பதத்தை உறிஞ்சாது. எனவே குறிப்பாக நைலான், பாலியஸ்டர் போன்ற உள்ளாடைகளுக்கு தயவு செய்து செல்லாதீர்கள். இது உங்க பெண்ணுறுப்பில் அரிப்பு, சிவத்தல் மற்றும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. பருத்தி உள்ளாடைகளை மட்டுமே உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும். பெரும்பாலான பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுவதையே கஷ்டமாக உணர்கின்றனர். முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்க உள்ளாடைகளை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

quality underwear,women,confortable,big tummy ,தரமான உள்ளாடைகள், பெண்கள், கூட்டமைப்பு, பெரிய வயிறு

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்குவது அந்த பகுதியை சுவாசிக்க வைக்கிறது. சிலருக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால் காற்றோட்டமான உள்ளாடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இது உங்க சொந்த விருப்பத்தை பொருத்தது. முடிந்தால் உள்ளாடைகளை தனியாக துவைக்க முற்படுங்கள். ஏனெனில் உள்ளாடைகளில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம். உள்ளாடைகளை துவைக்க மைல்டு சோப்பு பயன்படுத்துங்கள். சூரிய ஒளியில் உலர வையுங்கள்.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் உள்ள பாக்டீரியாக்களை கொல்ல உதவும். ஒவ்வொரு ஆண்டும் பழைய உள்ளாடைகளை மாற்றி புதிய உள்ளாடைகளை வாங்க மகப்பேறியியல் மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஒருவேளை துணியின் நெகிழ்வுத்தன்மை இழந்து விட்டாலோ அல்லது துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டாலோ உடனே மாற்றுவது நல்லது. எனவே எப்போதும் புதிய உள்ளாடைகளை கைவசம் வைத்து இருங்கள்.

Tags :
|