Advertisement

உங்கள் நிறத்திற்கு பொருத்தமான ஆடையை தேர்வு செய்வது எப்படி?

By: Monisha Wed, 23 Dec 2020 2:54:15 PM

உங்கள் நிறத்திற்கு பொருத்தமான ஆடையை தேர்வு செய்வது எப்படி?

நீங்கள் வாங்கும் ஆடைகள் உங்களுக்கு பொருத்தமற்றதாக அமைந்தால் அதற்கான முக்கிய காரணம் உங்கள் சருமத்தின் நிறத்தை நீங்கள் கண்டறியாததுதான். வண்ணங்கள் ஏராளமாக உள்ளது. அதில் நம் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற ஆடையை தேர்ந்தெடுப்பது நிச்சயம் கடினமான ஒன்றாகும். நீங்கள் உங்கள் ஆடைகளை எளிதாகவும் சிறந்ததாகவும் வாங்க உங்கள் நிறத்திற்கு பொருத்தமான ஆடையை தேர்வு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் சருமத்தின் நிறம் வெளுத்த வெள்ளையாக பால்போன்ற நிறத்தில் இருந்தாள் எல்லா வகையான அடர் நிறங்களை நீங்கள் முயற்சிக்கலாம். அதாவது ரோஸ், கடற்படை நீலம், பாட்டில் பச்சை, அடர் சாம்பல் போன்ற அனைத்து நிறங்களும் உங்கள் வெளிர் நிறத்திற்கு ஏற்றதாக அமையும். இது மேலும் உங்கள் முகத்தின் அம்சங்களை அழகாக முன்வைக்கும். இதற்கு முரணாக ஏதேனும் ஒரு வெளிர் நிறத்தை அல்லது பிரகாசமான நிறங்களை அணிந்தால் உங்கள் தோற்றத்தின் அம்சங்களை சரியாக முன்வைக்கை உதவாது. ஆகையால், அடர் நிறங்களை தேர்ந்தெடுங்கள்.

clothing,skin color,fashion,appearance,bright color ,ஆடைகள்,சரும நிறம்,பேஷன்,தோற்றம்,பளிச் நிறம்

உங்கள் தோலின் நிறம் மாநிறமாக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிறங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை விட சிறிது அடர் நிறமாகவோ அல்லது சிறிது பிரகாசமான நிறமாக இருக்க வேண்டும். அதாவது க்ரீமி ஆரஞ்சு நிறம், மஞ்சள் நிறம், லாவண்டர், மெஜந்தா, இங்க் ப்ளூ போன்ற நிறங்களுடன் முக்கியமாக வெள்ளை நிறத்தை சேர்த்தால் மாநிற தோல் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இவ்வகை மாநிறம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான நிறங்கள் பொருத்தமாக தோன்றினாலும் எது சிறந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் சருமத்தின் அடித்தள நிறம் ஒலிவ் கிரீன் அல்லது வெளிர் மஞ்சளாக இருப்பதால் இந்த நிறங்களின் வரிசையில் இருக்கும் நிறத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது உங்கள் அம்சங்களை முன்னிலைப்படுத்தாது.

இதுவரை நீங்கள் வெளிர் நிறம் கொண்டவர்கள் மட்டுமே எவ்வகையான நிறங்களையும் அணிந்து செல்லலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அது தவறு. உண்மையில் அடர் வண்ண தோல் கொண்டவர்கள் மட்டுமே இந்த பலனை அனுபவிக்க முடியும். இவ்வகை தோல் கொண்டவர்கள் எப்பேர்ப்பட்ட பிரகாசமான நிறங்களாக இருந்தாலும் அணிந்து செல்லலாம்.

clothing,skin color,fashion,appearance,bright color ,ஆடைகள்,சரும நிறம்,பேஷன்,தோற்றம்,பளிச் நிறம்

இவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் ஒரே நிறத்தில் தனது ஆடையை அணியாமல் இரண்டு அல்லது மூன்று நிறங்களில், ஒன்றுக்கு மற்றொன்று முரணாக இருப்பதாக இருந்தால், தனது தோற்றத்தை இன்னும் அழகாக முன்வைக்கலாம். அதேபோல் இவர்கள் தவிர்க்க வேண்டிய நிறங்கள் பழுப்பு நிறம் மற்றும் அதன் வரிசையில் வரும் நிறங்கள் ஆகும். ஏனெனில் இது இவர்களின் நிறத்தோடு ஒற்று போவதால் அது ஒரு ஈர்க்கும் தோற்றத்தை அளிக்காது.

வெவ்வேறு தோலுக்கு ஏற்ற நிறங்களில் ஆடைகளை நீங்கள் அணிந்தாலும் ஏதேனும் ஒரு நிறம் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தால் அதை முயற்சிப்பதில் தவறில்லை. அதேபோல் உங்கள் தோற்றத்திற்கு பளிச்சிடும் நிறங்கள் அழகாக அமையாது என்று நீங்கள் நினைத்தால் அதை வெறும் ஆடைகளில் மட்டுமில்லாமல் அணிகலன்கள் , பெல்ட், ஹாண்ட் பாக், காலணிகள் என்று அந்த நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதுவே ஆடைகளை மிக சிறப்பாக அணிவதற்கான அடித்தளமாகும்.

Tags :