Advertisement

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும்?

By: Monisha Thu, 11 June 2020 3:15:45 PM

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும்?

பெண் குழந்தைகளுக்கு என பிரத்தேகமாக பல வண்ணங்கள் மற்றும் பல வித மாடல்களில் ஆடைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

திருமண விழா
திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வளையல், கைகளுக்கு மெஹந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

girls,jewelry,clothes,wedding ceremony,birthday party ,பெண் குழந்தைகள்,நகைகள், உடைகள்,திருமண விழா,பர்த் டே பார்ட்டி

ரிசப்ஷன்
மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.

girls,jewelry,clothes,wedding ceremony,birthday party ,பெண் குழந்தைகள்,நகைகள், உடைகள்,திருமண விழா,பர்த் டே பார்ட்டி

பர்த் டே பார்ட்டி
அடிக்கடி போவது பர்த் டே பார்ட்டிக்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.

Tags :
|