Advertisement

உங்கள் உடலமைப்பை தெரிந்து ஆடைகளை தேர்வு செய்யுங்கள்!

By: Monisha Mon, 24 Aug 2020 5:35:27 PM

உங்கள் உடலமைப்பை தெரிந்து ஆடைகளை தேர்வு செய்யுங்கள்!

தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகளே தெரியாத அளவுக்கு அவர்களை ஆடை வடிவமைப்பு மூலம் அழகில் மெருகேற்றி காட்டுகிறார்கள், பேஷன் டிசைனர்கள். அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும்.

பெண்கள் தினமும் காலையில் கண்விழித்து கண்ணாடிமுன் நின்று தங்கள் அழகை பார்க்கும் போது அவர்களுக்கு பளிச்சென்று தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகள்தான் தெரியவரும். அதிக உடல் எடை கொண்டவர்கள் சற்று வருத்தத்தோடு 'இன்னும் கொஞ்சம் உடல் மெலிந்தால் அழகாக இருக்கும்' என்று நினைப் பார்கள். அளவுக்கு அதிகமாக உடல்மெலிந்து காணப்படுகிறவர்கள், 'சற்று உடல் பூசிமெழுகியது போன்றிருந்தால் அதிக அழகு கிடைக்குமே’ என்று மனதிற்குள் சொல்லிக் கொள்வார்கள். தங்கள் உயரத்தை குறித்தும், சரும நிறத்தை குறித்தும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தினமும் கவலைப்படும் பெண்கள் ஏராளம்.

body,fashion,design,beauty,clothing ,உடலமைப்பு,பேஷன்,டிசைன்,அழகு,ஆடைகள்

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன் உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும். பொதுவாக பெண்களின் உடலமைப்பை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல், செவ்வக மாடல், ஹவர் கிளாஸ் மாடல் என்று பிரிக்கிறோம். இடுப்பு க்கு மேல் பகுதி பெரிதாகவும்- இடுப்புக்குகீழ் பகுதி சிறுத்தும் காணப்படும் உடல் வாகை கொண்ட பெண்கள், ஆப்பிள் மாடல். இடுப்புக்கு மேல்பகுதி சிறுத்தும்- கீழ் பகுதி பருத்தும் காணப்படுகிறவர்கள் பேரிக்காய் உடல்வாகு பெண்கள். இந்தியாவில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள்.

செவ்வகவடிவ பெண்கள், கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பை கொண்ட பெண்கள் தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள். இந்த நான்கில் தனது உடல் அமைப்பு எத்தகையது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் தங்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும்.

body,fashion,design,beauty,clothing ,உடலமைப்பு,பேஷன்,டிசைன்,அழகு,ஆடைகள்

அடுத்து தங்கள் சரும நிறத்தை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நிறத்துக்கு ஏற்ற ‘பேப்ரிக்’கை தேர்ந்தெடுப்பது அவசியம். காட்டன், பட்டு போன்று ஏராளமான பேப்ரிக் உள்ளது. அவை ஒவ்வொன் றிலும் ஏராளமான உட்பிரிவுகளும் உள்ளன. ஆடை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் உயரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொருத்தமான உடைகளை தேர்ந்தெ டுத்து அணிந்தால், அவர்களது உடல் அமைப்பில் அவர்கள் குறையாக கருதும் விஷயங்களை நிறைவாக்கி, அழகாக தோன்றலாம்.

தற்போது பெண்கள் பெரும்பாலும் பேஸ்டல் கலர்ஸ் எனப்படும் இள நிறங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அது எல்லோரையும் கவர்ந்து, அமைதியான தோற்றத்தை தருகிறது. வேட்டி கவுன் இப்போது அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சவுகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள். இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ்பகுதி யில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.

body,fashion,design,beauty,clothing ,உடலமைப்பு,பேஷன்,டிசைன்,அழகு,ஆடைகள்

துப்பட்டா போட்டுக்கொள்வது என்பது பெண்களை பொறுத்த வரையில் சற்று கடின மான அனுபவமாக இருக்கிறது. பயணத்தின் போதும், வேலை செய்து கொண்டிருக்கும் போதும் அவர்கள் துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி அங்கும் இங்குமாக சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருக்கும். அந்த குறையை தீர்க்க இப்போது கேப் துப்பட்டாக்கள் வந்திருக்கின்றன. இதனை மேலாடையுடன் சேர்த்து அப்படியே தைத்து விடுகிறார்கள். சேர்த்து அணிந்து கொள்ளும் போது தைத்திருப்பது போல் தெரியாது. நகர்ந்துபோகாமல் சவுகரியமான அழகுடன் இது காட்சிதரும். எத்தனை நவீன உடைகள் வந்தாலும், பாரம் பரியமிக்க புடவைகளுக்கு இருக்கும் மதிப்பு பெண்கள் மத்தியில் குறையவே இல்லை. அதிலும் புதுமைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

Tags :
|
|
|