Advertisement

பெண்களை கவரும் டிரெண்டில் உள்ள லெஹெங்கா வகைகள்!

By: Monisha Mon, 12 Oct 2020 1:18:16 PM

பெண்களை கவரும் டிரெண்டில் உள்ள லெஹெங்கா வகைகள்!

பெண்கள் அனைவரும் பண்டிகை, திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அணியப் பாரம்பரிய உடைகளைத் தான் தேர்ந்து எடுப்பார்கள். இப்போது பாரம்பரிய உடைகள் எல்லாம் நவீனக் காலத்திற்கு ஏற்ப மாறிவருகிறது. அதில் ஒன்று தான் லெஹெங்கா. திருவிழாக்கள் அல்லது விசேஷ விழாக்களுக்கு நீங்கள் செல்ல போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயமாக லெஹெங்கா மிகப் பொருத்தமாக இருக்கும். உங்கள் தோற்றத்திற்கு அழகினை சேர்க்கவும் மற்றவர்களின் கண்களைக் கவர்வதற்கு நீங்கள் லெஹெங்கா சோலியை அணியலாம். லெஹெங்காவில் பல வகைகள் உள்ளன அவற்றில் மிக டிரெண்டில் உள்ள சில லெஹெங்காக்களை தெரிந்துகொள்வோம்.

ஜாக்கெட் ஸ்டைல் ​​லெஹெங்கா
இந்த வகை லெஹங்காவில் ஜாக்கெட் மட்டும் மிகவும் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எப்போதும் போல் லெஹெங்கா அணிந்து அதன் மேல் ஒரு நீண்ட வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட் அணிவதே ஜாக்கெட் ஸ்டைல் ​​லெஹெங்கா ஆகும். இதில் ஒரு சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் அல்லது மின்னும் கற்கள் கொண்ட வேலைப்பாடுகள் நிறைந்து இருக்கும். இந்த ஆடை அணியும் போது நீங்கள் வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளிப்பீர்கள்.

women,trend,lehenga,jacket style,sharara cut ,பெண்கள்,டிரெண்ட்,லெஹெங்கா,ஜாக்கெட் ஸ்டைல்,ஷராரா கட்

சேலை லெஹங்கா
சில பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் லெஹங்கா அணியச் சற்று சங்கடமாக உணருவார்கள். அவர்களுக்காகச் சேலை லெஹங்கா என்ற ஒன்று உள்ளது. இது அணியும்போது சேலை அணிந்தவாறு இருக்கும். இது அணியும் போது சேலையை விடச் சிறந்ததாக இருக்கும். சேலை கட்ட தெரியாத பெண்களும் சேலை கட்ட நேரம் எடுத்துக் கொள்ளும் பெண்களும் இந்த சேலை லெஹங்காவை அணிந்து திருமண விழாக்களில் அசத்தலாம்.

ஷராரா கட் லெஹங்கா
தற்போதைய நவநாகரீக காலத்தில் திருமண விழாக்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இந்த கட் லெஹங்கா விளங்கும். ஷராரா லெஹங்கா இந்திய பேஷன்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது உங்களுக்கு ட்ரெண்ட் ஆன லுக்கை கொடுக்கும். இது ஒரு பக்க கோணலுடன் ஒரு நேரான பலாஸ்ஸோவை ஒத்து இருக்கும். நீங்கள் அணியும் கட் லெஹங்காவிற்கு மேட்ச் ஆக அணிகலன்களை அணியும் போது உங்கள் அழகு மேலும் மெருகூட்டப்படுகிறது.

women,trend,lehenga,jacket style,sharara cut ,பெண்கள்,டிரெண்ட்,லெஹெங்கா,ஜாக்கெட் ஸ்டைல்,ஷராரா கட்

ஸ்டைல் லெஹங்கா
இது சற்று எளிமையான ஒன்று தான். உங்களுக்கு கிராண்ட் லெஹங்கா அணிய விருப்பம் இல்லாத போது எளிமையான ஸ்டைல் லெஹங்காவை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் ஸ்டைல் லெஹங்கா தேர்வு செய்யும் போது அதன் நிறத்தை உங்களுக்குப் பிடித்தவாறு தேர்வு செய்து அதற்கு இணையான நகைகளை அணிந்து பிரதிபலியுங்கள்.

பிராட் ஃபிளேர்டு லெஹங்கா
இதுவரையும் நம் பார்த்த லெஹங்காவை விட சற்று ஒடுங்கிய ஒன்றாக இருக்கும். ஆனால் இது சற்று ஸ்பெஷல் ஆனது. அதாவது கொஞ்சம் பறந்து விரிந்து காணப்படும் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்டைலான லெஹங்கா பரந்து விரிந்து காணப்படுவதால் சற்று தனித்துவமான தோற்றத்தால் நீங்கள் ஜொலிப்பீர்கள். இந்த லெஹங்கா தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ஒன்றாகவும் உள்ளது. இதற்கு மேட்ச்சான நகைகளை அணிந்து விசேஷ வீடுகளில் கலக்குங்கள்.

Tags :
|
|