Advertisement

கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடைகள்

By: Karunakaran Thu, 12 Nov 2020 2:09:02 PM

கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடைகள்

பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட கச்சிதமான பேன்ட்டுகளுக்கு பிளெயின் நிறத்தில் வாசகங்கள் பொரிக்கப்பட்ட கச்சிதமான முழுக்கைச் சட்டைகளுடன் வரும் ஆடைகளை சிறு பெண் பிள்ளைகளிலிருந்து நடுத்தரப் பெண்கள் வரை விரும்பி அணியக்கூடியதாகும். இது போன்ற ஆடைகள் பனியன் துணிகளில் மென்மையாக இருப்பதால் வீட்டில் அணிந்து கொள்ள வசதியாக இருக்கின்றது. முட்டிக்காலிற்கு கொஞ்சம் கீழே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீண்ட டிஷர்டானது ‘ஒன் ட்ரெஸ்’ என்று கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடையாகவுள்ளது.

காட்டன் கேப்ரி மற்றும் ஷார்ட்ஸ்சுடன் அரைக்கை டிஷர்ட் அணிந்து கொள்வதும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய ஆடையாகவே இருக்கின்றது. ஆஃகானி பேன்ட்களிலும் பிளெயின் நிறம் மட்டுமல்லாது பிரிண்டட் டிசைன்கள் வருவதும் புது வரவாக உள்ளது. பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட கனுக்காள் உயரமுடைய ஹாரம் பேன்ட்டுகளுக்கு நீண்ட குர்த்தி அல்லது ஷார்ட் குர்த்தி கைகளில்லாமல் அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

outfits,college students,one dress,long dress ,ஆடைகள், கல்லூரி மாணவிகள், ஒன் ட்ரெஸ், நீண்ட உடை

காட்டன் மற்றும் ரேயான் துணிகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பளாஸோ பேண்டுகளுடன் காலர் வைத்த ஷார்ட் டாப்பை வீட்டிலிருக்கும் பொழுது டக்இன் செய்யாமலும் வெளியில் செல்லும் பொழுது டக்இன் செய்து கொண்டும் செல்லலாம். ஜிப்ஸி எலாஸ்டிக் யோகா பேன்ட்டுகளும் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் ஒன்றாக உள்ளது. கார்கோ பேன்ட்டுகளுக்கு தொள தொளப்பான சட்டைகளை அணிந்து கொள்வதும் வசதியான உடையாகவே உள்ளது.

சஸ்பென்டர் பேன்ட்டுகளுக்கு ரவுண்டு நெக் டிஷர்ட் அணிந்து கொள்வது பொருத்தமாகவும் , பேஷனாகவும் உள்ளது. பிரிண்டட் பைஜாமாக்களுக்கு பிரிண்டட் டாப் அணிவதும், பிளெயின் டாப் அணிவதும் பிரபலமாகி வருகின்றது. காட்டன் லாங் ஃப்ராக்குகளும் வீட்டில் அணிந்து கொள்ள வசதியான உடையாகவே கருதப்படுகின்றது. பெக்டு பேன்ட்டுகளுக்கு முக்கால் கை வைத்த பனியன்களை அணிந்து கொள்ளலாம். பேகி பேன்ட்டுகளுக்கு பிளெயின் ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டுகளை அணியலாம். லாங் அண்டு வொய்ட் ஸ்கர்ட்டுகளுக்கு க்ராப் டாப்புகளை அணிந்து கொள்ளலாம். ஸ்ட்ராப்புகளுடன் கூடிய ஸ்லீவ்லெஸ் டாப்பிற்கு அதே டிசைனில் இருக்கும் ஷார்ட்ஸ்கள் அனைவரும் ஆடையாக உள்ளது.


Tags :