Advertisement

பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் அளிக்கும் செயலிகள்

By: Karunakaran Tue, 17 Nov 2020 7:55:19 PM

பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் அளிக்கும் செயலிகள்

பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது அப்ளிகேஷன்களிலேயே கிடைக்கிறது. பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளைஞர்-இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகள் :-

பேஷன் குளோசெட் (Fashion closet) : இந்த செயலியை ஓபன் செய்து, தனித்தனியாக தலைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம்.

வார்டுரோப் அசிஸ்டெண்ட் (wardrobe assistant) : திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை இந்த செயலி அளிக்கிறது. இதில் ஆடைகளை நல்ல விலைக்கு விற்கும் வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிருமுறை பயன்படுத்திய அல்லது வாங்கியபின் அளவு, நிறம் போன்றவை பொருந்தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த ‘ஆப்’பின் வாடிக்கை யாளர்களிடையே விற்கலாம்.

processors,fashion wear,youngsters,dress ,செயலிகள், பேஷன் உடைகள், இளைஞர்கள், உடை

ஷிசிமோ(Chicisimo) : பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்கு பல்வேறு பேஷன் ஐடியாக்களை பெற்றுத் தரும்.

ஸ்மார்ட் குளோசட்(Smart Closet) : ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டு மல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த ‘ஆப்’பில் உள்ள பிரத்யேகக் கேலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்.

பாலிவோர்(Polyvore) : இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, சந்தையில் உள்ள டிரெண்டிங் ஆடைகளை பார்க்கலாம், வாங்கலாம் மற்றும் பிறரின் கருத்துகளையும் பெறலாம்.

Tags :