Advertisement

பெண்கள் அணியும் உடைகளில் எப்பொழுதுமே ஒரு தனி மதிப்புள்ள சேலைகள்

By: Karunakaran Thu, 19 Nov 2020 2:05:24 PM

பெண்கள் அணியும் உடைகளில் எப்பொழுதுமே ஒரு தனி மதிப்புள்ள சேலைகள்

சேலைகளில் புதுவரவானது வந்து கொண்டேதான் இருக்கின்றது. முந்தானை இல்லாமல் உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் வரும் க்ரஷ் ஷிஃபான் சேலைகள் மிகவும் மென்மையான வண்ணங்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் வந்துள்ளன. பல்லுவில் வித்தியாசமான டிஜிட்டல் டிசைன்களுடன் வழவழப்புத் தன்மையுடன் பளபளப்பாக வந்திருக்கும் புது வரவே ஷேட்டின் ஷில்க் சேலைகளாகும். இவற்றின் விலை ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஆறு இன்ச் பார்டர் முதல் பனிரெண்டு இன்ச் பார்டர்வரை பட்டுச் சேலைக்கே சவால் விடும் அழகுடன் வந்திருப்பவை கோரா மஸ்லின் சேலைகள் என்று சொல்லலாம். எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் வந்திருக்கும் லினன் சேலைகள் முந்தியில் குஞ்சம் வைத்து வந்திருப்பவை. உடலில் சின்ன எம்பிராய்டரி டிசைன், பார்டரில் மட்டும் எம்பிராய்டரி டிசைன், ஜரிகை பார்டர் எனப் பலவிதமாக மனம் மயக்கும்படி வந்துள்ளன. வொர்லி பிரிண்ட் எம்பிராய்டரியில் கொண்டு வந்திருப்பது ஒரு புது முயற்சியாக உள்ளது.

sarees,clothes,women,designed sarees ,புடவைகள், உடைகள், பெண்கள், வடிவமைக்கப்பட்ட புடவைகள்

புடவை முழுவதும் ஒரே வண்ணத்திலிருக்க புடவையின் மேல்புறம் சிறிய பார்டர், கீழ்புறம் பெரிய பார்டர், பல்லு முழுவதும் டிசைன் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் வரும் செமி ஆர்ட் பனாரஸ் சேலைகளானது பட்டுப் புடவைகளுடன் போட்டி போடுவதோடு ஆயிரம் ரூபாயில் இவ்வளவு அழகான சேலைகளா? என்று வியக்க வைக்கின்றது. அலுவலகப் பயன்பாடு மற்றும் தினசரி உடுத்துவதற்கும் நேர்த்தியாக இருப்பவை என்றால் அவை செமிகாதி சில்க் சேலைகளாகும்.

சனா சில்க் சேலைகளுக்கு ப்ரோகேட் பிளவுஸ்கள் மற்றும் அதற்கு ஏற்றாற் போல் அசத்தலான நகைகளும் அத்துடன் இணைந்து விற்பனைக்கு வந்துள்ளன. பிளெயின் வண்ண சேலைக்கு கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் நிறத்திலேயே இரண்டு விதமான வேலைப்பாடுகளுடன் வரும் பிளவுஸ்கள் என்று கலக்கலாக வந்திருக்கின்றன சனா சில்க் சேலைகள். செட்டிநாடு காட்டன் புடவைகளிலும் பிளையின் வித் பார்டர், கட்டங்கள் வித் பார்டர், ஜரி பார்டர், நூல் பார்டர் என அனைத்து வயதினரும், அணிவதற்கு ஏற்றாற்போல் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டு புதுவரவாக வந்துள்ளன.

Tags :
|
|