Advertisement

சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனைக்கு வரும் பட்டுச்சேலைகள்

By: Karunakaran Wed, 18 Nov 2020 6:24:50 PM

சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனைக்கு வரும் பட்டுச்சேலைகள்

இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன. பிளையின் நிற மருதாணிப் பச்சையில் சில்வர் நிற ஜரிகையுடன் ஒருபுறம் மட்டும் பார்டர் இருக்க, பல்லு முழுவதும் சில்வர் நிற ஜரிகையால் நெய்யப்பட்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. சில்வர் நிற ஜரிகைகளுக்கு ஏற்றார் போல் உடல் நிறத்தை சேலையில் தேர்ந்தெடுத்து நெய்கிறார்கள் என்றே சொல்லலாம்.

உடல் முழுவதும் ருத்திராட்ச டிசைனானது சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டு, பல்லுவும் உடல் வண்ணத்திலேயே சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டிருக்கும். இந்தச் சேலைகளுக்கு உதாரணமாக உடல் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்தால் அதற்கு மாறுபட்ட வண்ணமான மஜந்தா நிறத்தில் பைப்பிங் பார்டருடன் இருப்பது அணிந்து கொள்பவருக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பிங்கிஷ் ஆரஞ்சு நிறச் சேலைக்கு பீச் சில்வர் டிஷ்யுவுடன் மீனாகாரி வேலைப்பாடு செய்யப்பட்டு வரும் சேலையின் அழகை என்னவென்று வர்ணிப்பது.

silk sarees,silver lace,gold lace,sarees ,பட்டு புடவைகள், வெள்ளி சரிகை, தங்க சரிகை, புடவைகள்

சேலையின் மேற்புறம் சில்வர் ஜரிகையுடன் பெரிய பார்டரும், கீழ்புறம் தங்கநிற ஜரிகை பார்டர். அதன் கீழே மேல்புறம் இருப்பதைப் போன்ற பெரிய சில்வர் ஜரிகை பார்டருடன் உடல் முழுவதும் குறுக்குவாட்டில் கோடுகள் சில்வர் ஜரிகையால் டிசைன் செய்யப்பட்ட சேலைகள் வித்தியாசமாகவும், புது வரவாகவும் உள்ளன. சில்வர் நிற ஜரிகையில் வைரஊசியுடன் நெய்யப்படும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

அடர்த்தியான நீலம், பச்சை, மஜந்தா போன்ற உடல் பகுதி இருக்கும் சேலைகளின் நடுவில் ஆங்காங்கே சில்வர்நிற ஜரிகையில் மாங்காய் மற்றும் புட்டாக்களை டிசைன் செய்திருக்கிறார்கள். அதன் பார்டர் மற்றும் பல்லுவிற்கு வெளிர் சந்தன நிறத்தில் சில்வர் ஜரிகை கோடுகளுடன் மெல்லிய பைப்பிங் பார்டர்களுடன் வரும் சேலைகள் அனைத்துவித விழாக்களுக்கும் உடுத்திக் கொள்ள ஏற்றதாக உள்ளது. சில்வர் ஜரிகைகளுடன் பார்டரே இல்லாமல் வரும் பட்டுப்புடகைகளும் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அணிந்தாலும் மிக அழகிய தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும்.

Tags :