Advertisement

மேக்ஸி உடைக்கு இன்னும் அழகு சேர்க்க எளிய டிப்ஸ்!

By: Monisha Sat, 24 Oct 2020 3:26:46 PM

மேக்ஸி உடைக்கு இன்னும் அழகு சேர்க்க எளிய டிப்ஸ்!

பேஷன் உலகின் பெரும்பாலானோரது விருப்பம் மேக்ஸி டிரஸ். அணிந்து கொள்ள வசதியாக இருப்பது, கிராண்ட் லுக் தருகிறது என இதற்கு பல காரணங்கள் உண்டு. மேக்ஸி உடைக்கு இன்னும் அழகு சேர்க்க எளிய டிப்ஸ்!

வெஸ்டர்ன் டிரஸ்ஸான மேக்ஸியை எத்தினிக் மெட்டீரியலில் அணிந்தால் கிராண்ட் லுக் தரும். மேக்ஸிக்கு பெரும்பாலும் நகைகள் தேவையில்லை. வேண்டுமானால் மெல்லிய செயின் போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் மேக்ஸிக்கு மேட்சாக பெரிய தோடும் அணியலாம். மேக்ஸி அணிந்திருக்கும் போது ஃப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்திடுங்கள். டைட் பன் அல்லது ஹை பன் முயற்சிக்கலாம். பெஸ்ட் சாய்ஸ் பிஷ் போன் ஹேர்ஸ்டைல் தான்.

அடர் நிறத்தில் பார்த்துமே கண்ணைக்கவரும் வகையிலான நிறங்கள் கொண்ட மேக்ஸிக்களை இரவு நேர பார்ட்டிக்களுக்கு பயன்படுத்தலாம். இந்த உடைக்கு கழுத்துக்கு பெரிய நெக்லஸ் அணிந்தால் நன்றாக இருக்கும் டார்க் கலர் மேக்ஸி என்பதால் வொயிட் ஸ்டோன் எடுப்பாக இருக்கும்.

maxi style,fashion,grand look,beauty,dark color ,மேக்ஸி உடை,பேஷன்,கிராண்ட் லுக்,அழகு,டார்க் கலர்

மேக்ஸியில் ஸ்டைலிஷ் ஆன உடை போஹூ வகை. சிம்பிள் ஆக தெரிய வேண்டும் என்றால் இதை முயற்சிக்கலாம். இதில் கேஷுவல் லுக் கிடைக்கும். பெரிதாக நகைகளுக்கு மெனக்கெட தேவையில்லை. மேக்ஸியுடன் ஓவர் கோட் அணிந்தால் கச்சிதமாக இருக்கும். இந்த உடைக்கான முக்கிய விதி, இது முழுவதும் ப்ளைனாக இருக்கவேண்டும், பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் தவிர்த்திடுங்கள். கிராண்ட் நகைகளை தவிர்த்து சிம்பிளான பீட்ஸ் அணிந்தாலே இதற்கு போதும்.

இரவு நேர பார்ட்டிகளுக்கு இதனை தேர்வு செய்யலாம். லைட் மேக்கபுடன் இந்த உடையை அணிந்தாலே கச்சிதமாக இருக்கும். ஹெவி வொர்க் இருக்கும் மாதிரியான மேக்ஸியை இதற்கு தேர்வு செய்ய வேண்டாம். அதே போல உங்கள் ஹீல்ஸைத் தாண்டி மேக்ஸி நீளமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

Tags :
|