Advertisement

ஓணம் சாரீ அணியும் பெண்களுக்கான சில ட்ரெண்டிங் டிப்ஸ்!

By: Monisha Tue, 13 Oct 2020 1:42:21 PM

ஓணம் சாரீ அணியும் பெண்களுக்கான சில ட்ரெண்டிங் டிப்ஸ்!

ஓணம் சாரீ என்றாலே எல்லா பெண்களுக்கும் இஷ்டம் தான். கேரளாவில் இந்த ஓணம் சாரீ பாரம்பரியமாக பின்பற்றி வரும் பழக்கமாகும். என்னதான் பாரம்பரியமாக இருந்தாலும் பெண்கள் தற்போது ஓணம் சாரீயுடன் சில ட்ரெண்ட் ஆன விஷயங்களை சேர்த்து தங்களை அழகு படுத்த விரும்புகிறார்கள். எனவே இந்த நவநாகரீக பெண்களுக்கான சில ட்ரெண்டிங் டிப்ஸ்

ஓணம் புடவை பாரம்பரிய கசாவ் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய கசாவ் தோற்றம் இது தான் ஓணம் பண்டிகையின் மிக எளிமையான ஒன்று. ஆனால் மிகவும் அழகானது. பெண்கள் ஓணம் சாரீ அணிந்தாலே அழகு தான். ஒரு வெண்மை நிற கேரள புடவை அதன் ஓரத்தில் தங்க ஜாரி கொண்டு அழகு படுத்தப்பட்டு இருக்கும். இந்த பாரம்பரிய புடவையை அணிந்து காசுமாலை அல்லது நாணய நெக்லஸ் அத்துடன் மின்னும் தங்க நிற காதணிகளுக்கு ஈடே இல்லை.

onam,saree,women,fashion,trending,beauty ,ஓணம்,சாரீ,பெண்கள்,பேஷன், ட்ரெண்டிங்,அழகு

முண்டு இது பாப் கசாவ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஓணம் புடவை அல்லது முண்டு எது வேண்டுமோ அணியலாம். முண்டுகளின் எல்லைகளில் ஒரு குறிப்பிட்ட நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அந்த நிறத்திற்கு ஈடாக ரவிக்கை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள். இதற்கு தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் வளையல்கள் போன்றவற்றை நீங்கள் அணியலாம். இது உங்களின் தோற்றத்தை மேம்ப்படுத்தும்.

உங்களுக்கு நகைகள் மீது ஈடுபாடு அதிகமென்றால் ஓணம் புடவையை அணிந்து நெக்லஸ், மரகதங்கள் அல்லது வண்ண கற்கள் நிறைந்த மாலைகள் அத்துடன் மேட்ச்சாக காதணிகள் மற்றும் மாணிக்கங்களினால் ஆன வளையல்கள் ஆகியவற்றால் உங்களை அலங்கரியுங்கள். எல்லார் கண்களையும் கவர்ந்து விடுவீர்கள்.

onam,saree,women,fashion,trending,beauty ,ஓணம்,சாரீ,பெண்கள்,பேஷன், ட்ரெண்டிங்,அழகு

ஓணம் புடவையுடன் அதற்கு பொருந்துமாறு ஒரு கோல்டன் நிற ரவிக்கையை அணியுங்கள். இதற்கு ஈடு வேற எதுமே இல்லை. இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பதே கழுத்தில் எந்தவித அணிகலன்களும் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே நீங்கள் உங்கள் கழுத்தில் எந்த வித அணிகலனும் அணியாமல் தங்கம் மற்றும் வெள்ளை கற்கள் அல்லது முத்துகள் கொண்ட பெரிய காதணிகளை அணிந்து உங்கள் பேஷனை எல்லோருக்கும் வெளிப்படுத்துங்கள்.

Tags :
|
|
|