Advertisement

கல்லூரிக்கு கொண்டு செல்ல சில ட்ரெண்டியான பேக் வகைகள்!

By: Monisha Fri, 18 Dec 2020 5:04:27 PM

கல்லூரிக்கு கொண்டு செல்ல சில ட்ரெண்டியான பேக் வகைகள்!

விதவிதமான ஹாண்ட் பேக்கள் தற்போது சந்தைகளில் விற்கப்படுகின்றன. இன்றைய ட்ரெண்டில் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு ஹாண்ட் பேக்கள் கொண்டு செல்வது மிக முக்கியம் ஆகிவிட்டது. நீங்கள் கல்லூரிக்கு செல்பவர் என்றால், உங்களுக்கு தேவையான ட்ரெண்டியான சில பேக்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

பாக் பேக் (Back Pack) கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் பயணத்தில் எங்கு சென்றாலும் முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது ஏனெனில் இதில் இருக்கும் பல்வேறு சிறி பகுதிகள், விசாலமான இடம் இது அனைத்தும் பல பொருட்களை வைக்க உதவுகிறது. இது போல் ஒரு பேக்கை நீங்கள் கல்லூரிக்கு எடுத்துச் சென்றால் உங்களுக்கு தேவையான புத்தகங்கள், அணிகலன்கள், மேக்கப் கிட், இவை அனைத்தையும் வெவ்வேறு பகுதிகளில் வைத்துக்கொள்ளலாம். இரண்டு தோள்பட்டை கொண்ட இந்த பாக் பேக் எடுத்துச்செல்ல மிக வசதியாக இருக்கும்.

college,bag,trendy,fashion,women ,கல்லூரி,பேக்,ட்ரெண்டி,பேஷன்,பெண்கள்

டோட் பேக் (Tote Bag) ஒரே ஒரு பெரிய பகுதி இருப்பதால் அதில் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.புத்தகங்களுக்கு இது மிகவும் பொருத்தமான ஒரு வகை பை ஆகும். இது உங்களுக்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளிக்க உள்ளது . ஆகையால் இதுபோல் ட்ரெண்டியான டோட் பேக்கை உடனடியாக வாங்குங்கள்.

இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் ஸ்லிங் பேக்கை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை வருகிறது. ஸ்லிங் பேக் உங்கள் தனித்துவமிக்க ஆளுமையை முன்வைக்கும். இதன் தெளிவாகத்தெரிகின்ற கவர் இந்த வகை பையுக்கு ஒரு ஸ்டைலிஷான தோற்றத்தை அளிக்கிறது! மேலும் இதில் உங்கள் கல்லூரிக்கு தேவையான பொருட்களையும் வைத்து கொள்ளலாம்.

college,bag,trendy,fashion,women ,கல்லூரி,பேக்,ட்ரெண்டி,பேஷன்,பெண்கள்

கல்லூரிக்கு செல்லும் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பை இந்த பக்கெட் வடிவத்தில் இருக்கும் பேக் தான் . இதில் அதிகப்படியான பிரிவுகளும் பகுதிகளும் இல்லாவிட்டாலும் இதன் முக்கிய பகுதியில் அதிகபட்சமான பொருட்களை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். புத்தகங்கள், சாப்பாடு, ஸ்னாக்ஸ், பாட்டில், மேக்கப் கிட் என்று அனைத்திற்கும் இந்த பக்கெட் பேக் பொருத்தமானது!

ஹோபோ பேக் (Hobo Bag) உங்கள் கல்லூரிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதன் சிறப்பம்சம் இதை நீங்கள் ஒரு ஹாண்ட் பேக் ஆக எடுத்துச் செல்லலாம் அல்லது இதன் தோள் பட்டையை இரண்டாக சேர்த்து ஒரு பாக் பேக் போலவும் இதை எடுத்துச் செல்லலாம். இதனுள் இருக்கும் விசாலமான இடம் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல பொருத்தமானது.

Tags :
|
|