Advertisement

பெண்களின் அழகை மேலும் வசீகரிக்கும் ஸ்டிக்கி பிரா!

By: Monisha Wed, 09 Dec 2020 4:05:56 PM

பெண்களின் அழகை மேலும் வசீகரிக்கும் ஸ்டிக்கி பிரா!

அழகான உடைக்கு மேலும் மிகச்சிறந்த அழகை அதிகப்படுத்துவது நாம் அணியும் பிரா தான். அணியும் ஆடைகளுக்கு ஏற்றவாறு பிராவை அணிவது என்பது உங்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தமாதிரியான பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும் எது உங்கள் உடைக்கு அழகாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

ஸ்டிக்கி பரா (sticky bra) என்பது மற்ற பிரா போன்று கொக்கி மாட்டும் வடிவில் இல்லாமல் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் பசை போன்ற அமைப்பு பிராவுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் பின்னழகு காட்டும் உடைகளை மிக அழகாக அணியலாம். இவை இருக்கமான பிரா அணிவதால் ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு தரும்.

பிரா இருக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள் மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து முழு விடுதலை தரும். மேலும் பெண்களின் அழகை அழகாக காட்ட இந்த ஸ்டிக்கி பிரா உதவுகின்றது. சிலிக்கான், பாலித்தின் போன்ற மெட்டிரியலில் தயாரிக்கப்படுவாதால் எல்லா உடைகளுக்கும் இந்த பிரா பொருந்தும். முன்னழகை அழகாகவும் எடுப்பாகவும் காட்ட இந்த பிரா பயன்படுகின்றது.

women,beauty,sticky bra,fashion,elastic ,பெண்கள்,அழகு,ஸ்டிக்கி பிரா,பேஷன்,எலாஸ்டிக்

வழக்கமாக நாம் அணியும் பிராவை விட எல்லா விதத்திலும் ஸ்டிக்கி பிரா மிகவும் சிறந்தது. மிகவும் மென்மையாக உடலுடன் ஒட்டி இருப்பதால் நாம் வேகமாக பணி செய்யும் போது உடலை விட்டு விலகும் என்று நாம் அச்சப்பட வேண்டாம். உடைக்கு ஏற்றதாக இல்லாம் வெளியில் தெரியும் படி இருக்கும் சாதாரண பிராவில் இருக்கும் பிரச்சனைகள் இதில் இருக்காது.

நம்மை இருக்கி பிடிக்கும் எலாஸ்டிக்குகள் ஸ்டிக்கி பிராவில் இல்லாததால் நிம்மதியாக நமக்கு பிடித்த உடையுடன் வெளியில் சென்று வரலாம். மார்பக அடிப்பகுதியில் நன்கு ஒட்டிக்கொள்வதால் மற்ற பிராவில் ஏற்படும் தழும்புகள் இதில் ஏற்படாது. சிலருக்கு பெரிய மார்கபம் இருக்கும். அப்படி பட்டவர்கள் இருக்கமான பிரா அணிவதால் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு மிகப்பெரிய தீர்வாக ஸ்டிக்கி பிராவை தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்டிக்கி பிரா மிகவும் எளிமையாகவும் மென்மையாக மற்றும் அணிவதற்கு இலகுவாக இருப்பதால் தோலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஸ்டிக்கி பிரா அணிவதால் மிகப்பெரிய பிரச்சனையான பிரஸ்ட் கேன்சர் தவிர்க்கப்படுகின்றது. இருக்கமான பிரா அணிவதால் வேர்வை துளிகல் வெளியில் செல்லாமல் ஈரமாக இருக்கும். மார்பகம் மிகவும் அழுத்தப்படுவதால் ஏற்படும் கேன்சர் பிரச்சனை முற்றிலுமாக தவிர்க்கப்படுகின்றது.

women,beauty,sticky bra,fashion,elastic ,பெண்கள்,அழகு,ஸ்டிக்கி பிரா,பேஷன்,எலாஸ்டிக்

மிகமுக்கியமாக மாடல்கள் பலர் தெரிவிப்பது என்னவென்றால் இருக்கமான பிரா அணிவதால் நாட்கள் செல்ல செல்ல மார்பகம் தனது அழகை இழந்து தொங்கும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற பிரச்னைகளை ஸ்டிக்கி பிரா தவிர்க்கின்றது.

நாம் அணியும் பிராவை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பிராவில் இருக்கும் அழுக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்துவிடவேண்டும். இல்லையெனில் அது மிகப்பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பிராவை களட்டியவுடன் சிறிது நேரம் காய விடவேண்டும். ஈரத்தன்மை போனவுடன் இதமான தண்ணீரில் சிறிது சோப்பு லிக்கிவுடை கலக்கவும். அதில் நாம் உபயோகித்த பிராவை மிருதுவாக நன்கு அலசி எடுக்கவும். சிலிக்கான் மற்றும் பாலிஸ்டர் என்பதால் அழுக்கு சீக்கிரம் போய்விடும்.

நீங்கள் அணிந்த பிராவை நன்றாக துவைத்து காயவிடவும். நன்கு துவைத்து காய்ந்த பிராவை அடிக்கடி பயன்படுத்தலாம். பாலிஸ்டர் என்பதால் அழுக்கு அதிகம் தங்காது. துவைப்பதற்கு எளிதாக இருக்கும்.

women,beauty,sticky bra,fashion,elastic ,பெண்கள்,அழகு,ஸ்டிக்கி பிரா,பேஷன்,எலாஸ்டிக்

நன்றாக துவைத்த பிராவை இரவு முழுவதும் காயவிடவும். பிராவின் கப்கள் நன்றாக காய்ந்த பிறகு காட்டன் பைகளில் உங்களது பிராக்களை பத்திரப்படுத்தவும். நன்கு சுத்தம் செய்து சிறந்த முறையில் பயன்படுத்தினால் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ஸ்டிக்கி பிராவை அணிவதற்கு முன் உங்கள் மார்பக ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மார்பகத்தில் இருக்கும் வேர்வை தண்ணீரை ஒரு துணியால் நன்கு துடைத்து பின்னர் பயன்படுத்தவும். ஸ்டிக்கி பிராவை பயன்படுத்தும் முன்னர் மார்பகத்தை சுற்றி எந்த வித லோஷனும் தடவ வேண்டாம். தடவினால் பிரா சரியாக ஒட்டாது. உங்கள் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற ஸ்டிக்கி பிராவை பயன்படுத்தவும். இரவு நேர பார்ட்டிக்கு செல்லும் போது பிரா அதிக நேரம் அணிய வேண்டி இருக்கும்.

உங்களுது சருமம் ஆயிலாக இருந்தால் விரைவில் களன்று வர வாய்ப்புள்ளது. ஸ்டிக்கி பிராவை ஒட்ட பயன்படுத்தும் பசை உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்மூத்தான பசையை தேர்ந்தெடுக்கவும். ஸ்டிக்கி பிராவை களற்றும் முன் ஒட்ட பட்ட இடத்தை நல்ல லோஷன் மற்றும் தேங்காய் எண்ணெய்யால் தடவி எடுக்கவும்.

Tags :
|
|