Advertisement

ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்க கவனிக்க வேண்டியவை

By: Karunakaran Mon, 19 Oct 2020 2:19:33 PM

ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்க கவனிக்க வேண்டியவை

`ஆள் பாதி ஆடை பாதி’ என்பது பழமொழி. இது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது. சிலருக்கு என்ன டிரஸ் போட்டாலும் உடல் சற்று பருமனாகவே தெரியும். காரணம் அவர்களாகவே மனதுக்குப் பிடித்த ஆடையை உடுத்துவதால் இப்படித் தெரியும். நாகரிக காலத்தில் ஆடை விஷயத்தில் நம் தேர்வு சரியாக இருக்கவேண்டும். பிளஸ் சைஸ் ஆட்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணிய முடியாது.

ஆடை விஷயத்தில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கலர் தான். நம்முடைய நிறம் மற்றும் உடல்வாகுக்கு ஏற்ப ஆடைகளின் நிறத்தை தேர்ந்தெடுத்தாலே போதும். நம்முடைய முழு அழகும் அதற்குள் அடங்கிவிடும். அழகுக்கு அழகு சேர்க்கும். பார்ப்பவர் வாயடைத்துப்போகுமளவுக்கு அவர்களது தோற்றத்தில் அத்தனை மாற்றங்கள் தெரியும். அடர்ந்த நிறங்கள் கொண்ட ஆடைகள் எப்போதும் உடலை சற்று மெல்லியதாகவே காட்டும்.

cloth,womens,dark colors,beauty ,துணி, பெண்கள், இருண்ட நிறங்கள், அழகு

பெண்களுக்கு மார்பகம் முதல் இடுப்பு வரை கச்சிதமான உடலோடு சேர்ந்திருக்குமாறு ஆடையின் ஃபேப்ரிக் இருப்பது அவசியம். டார்க் கலர் ஆடைகள் பெரும்பாலும் இடுப்பு மற்றும் மார்புப் பகுதியை சிக்கெனக் காட்டும். அடர்ந்த பெரிய பெரிய டிசைன்கள் கொண்ட அவுட்லுக் டிரஸ்களை அணியலாம். பெல்ட்டுடன் கூடிய கோட் மற்றும் ஆடைகளை அணியலாம். மார்பகங்களை எடுப்பாகக் காட்டும்படியான வீ- நெக் டாப்ஸ்களை அணிந்தால் உடல் சிக்கெனக் காட்டும். வயதானபிறகும்கூட சில பெண்கள் எடுப்பான தோற்றத்தில் இருப்பதற்கு இந்த ஆடை தேர்வுதான் காரணம்.

ஷர்ட் டாப் அணிந்து ஷர்க் அல்லது ஓப்பன் ஜாக்கெட் அணிந்தால் பார்ப்பதற்கு லுக்காகவும் மார்டனாகவும் இருக்கும். உடல்பருமனாக இருந்தாலும் வெளியே தெரியாது. இப்படி பெண்கள் சிக்கென இருக்கவேண்டும் என்பதற்காக ஃபேஷன் டிசைன் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப நிபுணர்களையோ அல்லது அதுதொடர்பாக அனுபவம் உள்ளவர்களையோ அணுகி உங்கள் அழகுக்கு அழகு சேர்த்து கொள்ளலாம்.

Tags :
|
|