Advertisement

டீன் பெண்களுக்கான ட்ரெண்டி ஆடை வகைகள்!

By: Monisha Sat, 19 Dec 2020 5:04:16 PM

டீன் பெண்களுக்கான ட்ரெண்டி ஆடை வகைகள்!

'ஆள் பாதி ஆடை பாதி' என்ற பழமொழி உண்மையிலையே அதிகம் அர்த்தம் நிறைந்தது. முதலில் கண்களை ஈர்த்தால்தான் பின்னர் இதயத்திற்குள் நுழைய முடியும். எனவே மற்றவர்களை கவர ஆடை முக்கிய பங்கு வகிக்கிறது. நம் அழகிற்கேற்ற ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டியது மிக முக்கியம். இந்த பதிவில் டீன் பெண்களுக்கான சில ட்ரெண்டியான ஆடை வகைகளை தெரிந்து கொள்வோம்.

பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள் இப்போதைய பேஷன் ஆகியிருக்கிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஆடை இதுதான். மழையும் குளிரும் வெயிலும் என என்னவாக இருந்தாலும் சரி எல்லா காலத்திலும் அணிய சௌகரியமான ஆடை பிளேர்ட் வகை ஜீன்ஸ்கள்.இதனை எந்த விதமான டாப் உடனும் நீங்கள் பொருத்திக் கொள்ளலாம்.

teen girls,trendy,clothing,fashion,jeans ,டீன் பெண்கள்,ட்ரெண்டி,ஆடை,பேஷன்,ஜீன்ஸ்

போல்கா வகை உடைகள் இன்றைக்கு மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லோராலும் விரும்பப்படும் அழகான உடை. இதனை எந்த வயதினரும் அணிய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். யார் அணிந்தாலும் அவர்கள் வயதைக் குறைத்து அழகை அதிகரித்துக் காட்டும் தன்மை உடையது போல்கா டாட் உடை.

தற்போதைய பேஷன் நிறமாக மஞ்சள் மாறியிருக்கிறது. வெஸ்டர்ன் அல்லது எத்னிக் என எந்த விதமான வகையிலும் இந்த நிறத்தில் நீங்கள் ஆடைகள் அணிந்தால் கவனிக்கப்படுவீர்கள். பூக்கள் நிறைந்த மஞ்சள் ஆடை இந்திய சரும நிறத்துடன் ஒத்து போகும் என்பதால் ஒருமுறை அணிந்து பாருங்கள்.

teen girls,trendy,clothing,fashion,jeans ,டீன் பெண்கள்,ட்ரெண்டி,ஆடை,பேஷன்,ஜீன்ஸ்

எல்லாவிதமான சூழ்நிலைக்கும் பொருத்தமானதாக ஒரு ஆடை வேண்டும் என்றால் அது ஜம்ப் சூட் தான். பார்ட்டியா, சாதாரண நாளா எல்லாவற்றிலும் உங்களையே உற்று நோக்க வைக்கும் ஒரு ஆடைதான் ஜம்ப் சூட். ப்ளேசர் அல்லது ஸ்னீக்கர் இதற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.

ஷிம்மர் உடைகள் வெப்ப நாட்டிற்கு ஏற்ற ஆடைகளில் ஒன்று. மிக எளிமையாக அதே சமயம் ஷைனிங் லுக் தேவைப்படுபவர்களுக்கு இந்த ஆடை பொருத்தமானது. அதற்கு மிக சரியான காலணி அணிவது உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும்.

Tags :
|