Advertisement

வகை வகையான குர்த்திகள்... குறித்த தகவல்கள்

By: Karunakaran Tue, 10 Nov 2020 4:58:51 PM

வகை வகையான குர்த்திகள்... குறித்த தகவல்கள்

லாங் குர்த்திகளை ஜீன்ஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், பளாஸோ, டைட்ஸ், டோத்தி பேன்ட் என எவற்றுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்ள முடியும். லாங் ஸ்கர்ட்டுகளுடன் லாங் குர்த்திகளை அணியும் பொழுது அவை நவீன தோற்றத்தைத் தருகின்றன. விருந்துகள், பகல் நேரப் பயணங்கள் போன்றவற்றிற்கு அணிய ஏற்ற ஆடையாக இது உள்ளது. பாகிஸ்தானிய குர்த்தி என்பது நீண்ட நேரான குர்த்தியின் மற்றொரு பதிப்பாகும். இவை பாரம்பரிய பிரிண்டுகளுடன் எத்னிக் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் ஜீன்ஸ், ஜெகிங்ஸ், லெகிங்ஸ், ஸ்ட்ரெய்ட் பேன்ட்ஸ், ஸ்கர்ட்ஸ் மற்றும் பளாஸோக்களுடன் அணிய ஏற்றவையாக உள்ளன.

உடலின் முன்புறம் வங்கி போன்று குட்டையாகவும் பின்புறம் வால் போன்று நீண்டும் இருக்கும். குர்த்திகள் ‘டெய்ல்’ குர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஸ்டாக்கிங்ஸ், லெகிங்ஸ், ஜீன்ஸ் மற்றும் ஜெகிங்ஸ்களுடன் அணியும் பொழுது கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது. ஆங்கில எழுத்தான ‘எ’ வடிவில் இருக்கும் குர்த்திகள் இளம் பெண்களிடையே பெரிய அளவில் பெற்றிருப்பவை என்று சொல்லலாம். இந்தக் குர்த்தியானது இடுப்பிலிருந்து விரிவடைந்து முழங்கால் அல்லது கணுக்கால் வரை நீண்டிருக்கின்றது. இவற்றை திருவிழாக்கள் மட்டுமல்லாது சாதாரணமாகவும் அணியலாம்.

kurtis,ladies,jeans,long skirt ,குர்திஸ், பெண்கள், ஜீன்ஸ், நீண்ட பாவாடை

அழகான மற்றும் நேர்த்தியான பாரம்பரியக் கலவை என்று அனார்கலி வகைக் குர்த்திகளைச் சொல்லலாம். இவ்வகைக் குர்த்தியானது எவ்வகை உடல் வாகு உடையவர்களுக்கும் பொருந்தக் கூடியது. அணியும் பொழுது உயர்ந்த குதிகால் செருப்பு அணிந்தால் அது அந்த ஆடையின் அழகை உயர்த்திக் காட்டுகின்றது. லாங் ஸ்ட்ரெய்ட் குர்த்திகளை தினசரி அணியும் உடையாகவும், பிரயாணங்கள், சிறு விழாக்கள் போன்றவற்றிற்கும் அணிகிறார்கள். நவீனப் போக்குடன் சமகால வடிவமைப்புடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவையாக இருப்பவை டோத்தி குர்த்திகளாகும்.

அந்தக்கால இசைக் கலைஞர்களின் ஆடை வடிவமைப்பிலேயே வந்திருப்பவைதான் அங்க்ரகா குர்த்திகளாகும். இந்திய மற்றும் மேற்கத்திய பாணிகளின் இணைவுடன் ஷர்ட் மற்றும் குர்த்தி இரண்டும் சேர்ந்த கலவையாக வந்திருப்பவை ஷர்ட் குர்த்தி. இவை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. குர்த்திகளின் மேல் குட்டை ஜாக்கெட்டுகள் அணிவதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. இரண்டு மூன்று லேயர்களாக துணிகளை வைத்து தைக்கப்படும் குர்த்திகள் ஓவர்லே குர்த்திகளாகும்.

Tags :
|
|
|