Advertisement

பெண்களின் இடுப்பழகை மேம்படுத்தும் பலவகை ஒட்டியாணங்கள்!!

By: Monisha Fri, 11 Sept 2020 4:41:50 PM

பெண்களின் இடுப்பழகை மேம்படுத்தும் பலவகை ஒட்டியாணங்கள்!!

பாரம்பரிய நகை வகைகள் ஒவ்வொன்றும் பெண்களின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனிப்பட்ட வகையிலும் உடல் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம்.

முந்தைய காலத்தில் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், திருமணமான பெண்டீர் என அனைத்து வயது பெண்களும் ஒட்டியாணம் அணிந்து வந்துள்ளனர். நாளடைவில் ஒட்டியாணம் என்பது அதிக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. சிலர் குடும்ப நகையாக ஒட்டியாணத்தை பாதுகாத்து தொடர்ந்து அணிந்து வந்தனர்.

தற்போது மீண்டும் ஒட்டியாணங்கள் விரும்பி அணிகின்ற நகையாய் இருக்கின்றன. இதனால் நகை விற்பனையாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் அதிநவீன வடிவமைப்பு மற்றும் கூடுதல் கலைதன்மை கொண்டவாறு ஒட்டியான்களை உருவாக்கின்றனர். ஒட்டியாணங்கள் என்பது தற்போது மிக எடை குறைந்த அளவிலும், அதே நேரம் பெரிய பாந்தமான தோற்ற அமைப்பிலும் உருவாக்கப்படுகின்றன.

women,waist,traditional jewelry,gowns,fashion,beauty ,பெண்கள்,இடுப்பழகு,பாரம்பரிய நகை,ஒட்டியாணங்கள்,பேஷன்,அழகு

அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள்
அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள் என்பவை ஒவ்வொரு லட்சுமி உருவங்கள் இணைந்தவாறு உள்ளன. அதாவது ஆறு இதழ் பூ அமைப்புடன் கூடிய தட்டு பகுதியின் நடுவில் மகாலட்சுமியும் இதன் வலது புறம், இடது புறமாக மற்ற லட்சுமிகளும் வரிசை கிரமமாக ஒரே அளவில் இணைக்கப்படும். இதன் பிறகு தகடு அமைப்பும் இணைத்து கட்டும் கயிறு பகுதியும் உள்ளன. லட்சுமியின் அழகை மேம்படுத்த சிகப்பு, பச்சை கற்கள் ஆங்காங்கே பதியப்பட்டும், கீழ் சிறு மணிகள் தொங்க விடப்பட்டும் உள்ளன. அப்படியே தத்ரூபமான மகாலட்சுமியும், அதனுடன் இணைந்த அஷ்டலட்சுமியும் சிற்ப வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன.

மகாலட்சுமியும் அன்னபட்சியும் இணைந்த ஒட்டியாணங்கள்
ஒட்டியாணத்தின் நடுப்புறம் பெரிய மகாலட்சுமி இரு பக்கமும் யானையுடன் காட்சி தருகிறார். அதன் இருபுறமும் அன்னபட்சிகள் அழகுடன் சிற்பங்களாய் அணிவகுக்கின்றன. டெம்பிள் ஜுவல்லரி அமைப்பில் கலைநய செதுக்கல்கள் மட்டுமின்றி தகடு அமைப்பின் மேற்புறம் மகாலட்சுமி உருவம் மற்றும் அன்னபட்சி இணைக்கப்பட்ட ஒட்டியாணம் கிடைக்கின்றன. இதில் மகாலட்சுமி மற்றும் தன்னபட்சிகள் அனைத்தும் அழகிய கற்கள் பதித்தவாறும் ஒட்டியாணம் உள்ளன. வெள்ளை, பச்சை, சிகப்பு கற்கள் பதியப்பட்ட லட்சுமி உருவம் அதிக ஜொலிப்புடன் காட்சி தருகின்றன.

women,waist,traditional jewelry,gowns,fashion,beauty ,பெண்கள்,இடுப்பழகு,பாரம்பரிய நகை,ஒட்டியாணங்கள்,பேஷன்,அழகு

பேன்சி ஒட்டியாணங்கள்
பழைய ஒட்டியாண அமைப்பில் இருந்து மாறுபட்டு செயின் அமைப்பிலான பேன்சி ஒட்டியாணம் இளம் வயது பெண்களை அதிகம் கவர்கின்றன. இந்த ஒட்டியாணம் இடுப்போடு இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இல்லாது இருப்பினும் வலது புறம் சற்று தளர்வாக தொங்கும் அமைப்பில் உள்ளன. சில நடுப்பகுதியில் கற்கள் பதித்த டிசைன் செய்யப்பட்டு முற்றிலும் செயின் கயிறு அமைப்புடன் உள்ளன. சில பேன்சி ஒட்டியாணங்கள் மெல்லிய பட்டை செயினுடன் நடுப்பகுதி அழகிய எனாமல் பூக்கள் மற்றும் தொங்கும் குஞ்சரங்கள் உள்ளவாறு காட்சி தருகின்றன.

கற்கள் பதித்த ஒட்டியாணங்கள்
முற்றிலும் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் மெல்லிய அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இதில், பூக்கள், மயில், அன்னபட்சி அழகுடன் உள்ளவாறும் அதில் பல வண்ண கற்கள் பதித்து மெருகேற்றப்பட்டுள்ளன. சில அகலமான வலை பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே பெரிய இரட்டை மயில் கற்கள் பதித்தவாறும் அதன் சுற்று பகுதிகள் கொடிகள், பூக்கள் உள்ளவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு என தனிப்பட்ட சிறிய அளவிலான தங்க ஒட்டியானங்கள் கிடைக்கின்றன. ஒட்டியாணம் பெண்களின் இடுப்பழகை மேம்படுத்தும் நகையாக உள்ளது.

Tags :
|
|
|