Advertisement

தனிச்சிறப்பு பெற்ற செட்டிநாட்டுச்சேலைகள்!!

By: Monisha Tue, 04 Aug 2020 5:47:28 PM

தனிச்சிறப்பு பெற்ற செட்டிநாட்டுச்சேலைகள்!!

செட்டிநாடு பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஓர் சிறு நகரம். ஆனால் இதன் பெருமையை உலகமே பேசும் அளவிற்கு பெரிய நகரமாக திகழ்கிறது. எதிலும் தனித்து விளங்கும் செட்டிநாடு ஓர் கலையம்சம் நிறைந்த தனக்கென தனி கலாச்சார பெருமை கொண்ட நகரமாகவும். செட்டிநாடு சமையல், செட்டிநாடு அரண்மணை, செட்டிநாடு கோயில்கள் தனக்கென பிரத்யேகமான பல அம்சங்களை கொண்ட செட்டிநாட்டில் நெய்யப்படும் சேலைகளும் தனிச்சிறப்பும், உலகப்புகழ் பெற்றவையாகும்.

செட்டிநாட்டுச்சேலைகள் என்பவை இன்றைய நவீன யுகத்திகள் அணிய ஏற்றவாறு தனித்தன்மை கொண்ட டிசைன், வண்ணம், எம்பிராய்டரி டிசைன்கள் உடன் வருகின்றன. செட்டிநாட்டு சேலை தூய பருத்தி நூலால் நெய்யப்படும் சேலைகள். இச்சேலைகளின் டிசைன்கள் கண்டவுடன் இது செட்டிநாட்டு சேலை என்று கூறும் அளவிற்கு பிரத்யேகமான வடிவமைப்பு கொண்டவை. பல ஆண்டுகளால் செட்டிநாட்டு பகுதியில் நெய்யப்படும் செட்டிநாட்டு சேலைகள் பல புதிய மாற்றங்களையும் பெற்று வரத் தொடங்கியுள்ளது.

chettinad,saree,design,color,embroidery ,செட்டிநாடு,சேலைகள்,டிசைன்,வண்ணம்,எம்பிராய்டரி

சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த செட்டிநாட்டு சேலை என்பது செட்டி நாட்டவர் கைவண்ணத்தில் உருவான தன் நிகர் சேலையாகும். இது இரண்டு பார்டர் கொண்டதாகவும் நடுப்பகுதிகள் கட்டம் போட்டதாகவும் இருந்தன. நகரத்தார் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்த சேலைகள் நவீன வடிவம் பெற்று பல டிசைன்கள் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது. 48 இன்ச் அகலமும் 5.5 மீட்டர் நீளமும் கொண்டது செட்டிநாட்டு சேலை. நல்ல அடர்த்தியான மாறுபட்ட வண்ணங்களின் கலவையாக வெளிவரும் இச்சேலைகள் கட்டம் போட்டது என்பது மாறி கோடுகள், பெரிய கட்டம், பூக்கள் கொண்ட நடுப்பகுதியுடன் உருவாக்கப்படுகிறது. செட்டிநாட்டு சேலையின் சிறப்பே இரண்டு பக்க பெரிய பார்டர்கள் தான். அதனை கண்டாங்கி பார்டர் என்றழைப்பர்.

chettinad,saree,design,color,embroidery ,செட்டிநாடு,சேலைகள்,டிசைன்,வண்ணம்,எம்பிராய்டரி

இந்திய சேலைகள் தயாரிப்பில் அதிகம் இரசாயனம் கலக்கப்படுவதால் இதனை வெளிநாட்டவர் அதிகமாக இறக்குமதி செய்ய தயங்குகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு தற்போது செட்டிநாட்டு சேலைகள் இரசாயன கலப்பின்றி இயற்கை வண்ணம் மற்றும் பசை பொருட்களை பயன்படுத்தி நெய்யத்தொடங்கியுள்ளனர். மேலும் செட்டிநாட்டு சேலைகள் இந்திய ஹேண்ட்லூம் பிராண்ட் எனும் பெயருடன் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chettinad,saree,design,color,embroidery ,செட்டிநாடு,சேலைகள்,டிசைன்,வண்ணம்,எம்பிராய்டரி

பிரபலமான மங்கையர் முதல் அலுவலக பெண்மணி வரை அனைவரும் விரும்பி வாங்கும் செட்டிநாட்டு சேலைகள் பச்சை, பிரவுன், மாம்பழ மஞ்சள், சிகப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் அதற்கு மாற்றான வண்ணத்தில் அகலமான சரிகை பார்டர் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.

எந்த காலத்திலும் அணிய ஏற்றதும், சிறு அளவில் கஞ்சி போட்டாலும் உடுத்த ஏற்ற அமைப்பிலும், எளிதில் நிறம் மங்காத சேலையாகவும் செட்டி நாட்டு சேலைகள் திகழ்கின்றன. செட்டிநாட்டு நெசவாளர்கள் பிரத்யேகமாக தயாரித்து வழங்கும் இந்த செட்டிநாட்டு சேலைகள் நவீன உலகிற்கேற்ப ஆன்-லைனிலும் கிடைக்கிறது.

Tags :
|
|
|