Advertisement

ஸ்டைல் லுக் வேண்டுமா? ஸ்லிங் பைகளை பயன்படுத்துங்கள்!

By: Monisha Mon, 14 Dec 2020 5:48:54 PM

ஸ்டைல் லுக் வேண்டுமா? ஸ்லிங் பைகளை பயன்படுத்துங்கள்!

எப்போது கொண்டு செல்லும் சாதாரண பைகள் உங்களுக்கு அலுப்பாக இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியில் செல்லும்போது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் புதிய ஸ்லிங் பையுடன் இனி வலம் வாருங்கள். கைப்பைகள் மற்றும் தோள்பட்டைபைகள் போலவே ஸ்லிங் பைகளும் உங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த பதிவில் சில ஸ்லிங் பைகளின் வகைகளை தெரிந்துகொள்ளவோம்.

ஸ்கார்ஃப் பக்கெட் பை
பக்கெட் பைகள் இப்போது சமீபகாலமாக ட்ரெண்டில் இருக்கிறது. இதில் ஒரு பரந்த ஒற்றை திறப்பை கொண்டுள்ளதால் அதில் உங்களின் அனைத்து முக்கியமான பொருட்களையும் எளிதில் வைத்துக் கொள்ளலாம். இதை நீங்கள் ஒரு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கிராப் டாப் உடன் எடுத்துச் செல்லலாம்.

வர்ணம் பூசிய ஸ்லிங் பை
உங்கள் பையில் ஏதேனும் பாரம்பரிய தொடர்பை விரும்புகிறீர்கள் என்றால் இந்த மதுபானி ஸ்லிங் பேகை தேர்ந்தெடுங்கள். இதில் இருக்கும் வண்ணமயமான இந்திய நாட்டுப்புற ஓவியம் உங்களின் சாதாரணமான உடையும் ஸ்டைலாகவும் அழகாகவும் காட்டும். இந்தப் பை ஒரு அடர் நீலம் அல்லது கருப்பு டிரஸ் உடன் பொருந்தும்.

style look,fashion,sling bag,clothes,color ,ஸ்டைல் லுக்,பேஷன்,ஸ்லிங் பை,ஆடைகள்,வண்ணம்

கேமரா ஸ்லிங் பை
கேமராவின் வடிவத்தில் இருக்கும் இந்த பை மற்ற ஸ்லிங் பைகளை பார்க்கையில் தனித்துவம் கொண்டது. கேமரா பிரியர்களுக்கு ஏற்ற இந்த பை ஒரு நவீன பெண்மணிக்கான நவீன தோற்றத்தை நிச்சயம் அளிக்கும். ஜீன்ஸ், டி-ஷர்ட் மற்றும் ஒரு ஜாக்கெட் அணிந்து செல்லும் போது இது கச்சிதமாக பொருந்தும்.

அன்னாசிப்பழ ஸ்லிங் பை
நீங்கள் தனித்துவமான பைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதுபோன்ற நவநாகரீக பை கட்டாயமாக உங்கள் கலெக்சனில் இருக்க வேண்டிய ஒன்றாகும். வழக்கத்திற்கும் முரணாக விரும்புவோர்களுக்கு இந்தப் பை மிகவும் பொருந்தும். இந்த அழகிய போஹோ ஸ்டைல் அன்னாசிப்பழ வடிவத்தில் இருக்கும் பை உங்கள் பாணியை மேம்படுத்தும் ஒரு பையாக அமையும்.

ஹார்ட் ஸ்லிங் பேக்
இதய வடிவிலான இந்த பை உங்கள் இதயத்தை நிச்சயம் வென்றுவிடும். இது உங்கள் அன்பர்தவருடன் டேட்டிற்கு எடுத்துச்செல்ல மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

Tags :