Advertisement

திருமணத்தின் போது தனித்துவமாக தெரிய வேண்டுமா?

By: Monisha Mon, 23 Nov 2020 4:10:55 PM

திருமணத்தின் போது தனித்துவமாக தெரிய வேண்டுமா?

திருமணத்தின் போது முழு கவனமும் மணப்பெண் மீது தான் விழும். பெண்களே திருமண நாள் அன்று தேவதையாக ஜொலிக்க நீங்கள் பார்க்க வேண்டிய அழகிய திருமண சேலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இது உங்களின் தனித்துவத்தை காட்டுவது மட்டும் இல்லாமல் உங்கள் திருமண புடவையையும் ஒரு நவீன முறையில் காட்ட உதவி புரியும்.

டீல் க்ரீன் (Teal Green)
ட்ரெண்டில் இருக்கும் நிறங்களில் இது. சிறந்தது எனும் விதத்தில் , இந்த மணப்பெண் அணிந்திருக்கும் நிறம் தான் - டீல் க்ரீன். டிஸ்ஸு பட்டு என்று சொல்லப்படும் இந்த வகை பட்டு புடவைகள் பார்க்க பிளைன் புடவை போல இருந்தாலும் பட்டின் மினுமினுப்பு புடவை முழுவதும் இருக்கும். சேலை பிளைன்னாக இருப்பதால், இதற்கு ஒரு ஹெவி ஒர்க் பிளவுஸ் அதே நிறத்தில் இருப்பது அவசியம். இது பச்சை நிறத்தில் ஒரு மாறுபட்ட தோற்றம்!

wedding,colors,beauty,fashion,bridal ,திருமணம்,நிறங்கள்,அழகு,பேஷன்,மணப்பெண்

ஆப் வைட் வித் கோல்டன் ஜரி (White With Golden Zari)
தங்க நிறம் அல்லது சந்தன நிறத்தில் வரும் லைட் கலர் பட்டு புடவைகள் புதுக் கவிதை போல மிகவும் நேர்த்தியாக இருக்கும். இதற்கு பிரின்சஸ் கட்டிங் பிளவுஸ் நன்றாக இருக்கும். புடவைக்கு பொருந்துவது போல வெள்ளை கற்கள் மற்றும் வெள்ளை முத்துக்களால் செய்த நெக்லஸ் பொருத்தமாக இருக்கும். இதற்கு நீங்கள் உங்கள் புடவை நிறங்களில் ஒரு பிளவுஸ் அணியலாம் அல்லது வேறு ஒரு கான்ட்ராஸ்ட் பிளவுசும் (contrast) அணியலாம் (பழுப்பு நிற, பல வண்ணம், சிவப்பு, அடர் பச்சை). இதில் நீங்கள் ஒரு தங்க தேவதை போல் தெரிவீர்கள்!

wedding,colors,beauty,fashion,bridal ,திருமணம்,நிறங்கள்,அழகு,பேஷன்,மணப்பெண்

ஒலிவ் கிறீன் (Olive Green)
இது ஒரு மிக அருமையான நிறம். பச்சை,சிவப்பு,மஞ்சள் என்று பழைய நிறங்களின் தோற்றத்தில் மணப்பெண்களை பார்த்து அலுத்து இருக்குறீர்கள் என்றால் இது உங்களுக்கு மிக அவசியமான நிறம்! இது ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் நிறம் ஆகும். இதில், புடவை மற்றும் பிளவுஸ் ஒரே நிறத்தில் இருப்பதுதான் சிறப்பு.

லாவெண்டர் லுக் (Lavender Look)
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வண்ணங்கள் இரண்டு. அவை பிங்க் மற்றும் லாவெண்டர். இது போன்ற வித்தியாசமான நிறத்தில் மணப்பெண்னின் பட்டு புடவை இருந்தால் பார்க்க ஒரு கிளாஸி லுக் தரும். ஒரு இனிமையான தோற்றத்திற்கு இதுவே சிறந்த நிறம்!

Tags :
|
|