Advertisement

பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு எந்தவகை கிளட்ச் பொருத்தமாக இருக்கும்?

By: Monisha Tue, 08 Dec 2020 5:46:49 PM

பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு எந்தவகை கிளட்ச் பொருத்தமாக இருக்கும்?

பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு ஹேன்ட் பேக்கைவிட தங்கள் உடைக்கு தகுந்தவாறு பைகள் எடுத்துச் செல்லவே பெண்கள் விரும்புகிறார்கள். தற்போது சந்தைகளில் எக்கச்சக்கமான கிளட்ச்செஸ் (clutches) வந்துவிட்டது. இந்த பதிவில் விழாக்காலங்களில் உங்கள் பாரம்பரிய உடைக்கு பொருந்துமாறு எடுத்து செல்ல சில கிளட்ச் பை வகைகளை பார்ப்போம்.

சீகுயின் கிளட்ச்
அழகான பல வர்ணங்களில் உள்ள சீகுயின் பொருட்களால் வட்ட வடிவில் மின்னும் ஒரு கோள வடிவ கிளட்ச். பல நிறங்களில் மின்னுவதால், எந்த நிற பார்ட்டி நைட் ஆடைக்கும் பயன்படுத்தலாம். பிரகாசமான நிறத்தில் உள்ள உடைகளுக்கு மிகவும் எடுப்பாக தோன்றும் இந்த கிளட்ச். இதை ஒரு சீகுயின் வடிவமைப்பில் உள்ள கருப்பு அல்லது அடர் பச்சை நிற டிரஸ் உடன் மேட்ச் செயுங்கள்.

சில்வர் ஹார்ட் கிளட்ச் பேக்
இதய வடிவில் முழுவதும் ரைன்ஸ்டோனால் அலங்கரிக்கப்பட்டு கருப்பின் மீது சில்வர் நிறம் ஜொலிக்கும் ஒரு அழகிய கிளட்ச் இது . இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு ட்ரெண்டியான கிளட்ச் பேக் இது. அனைத்து வெஸ்டர்ன் ஆடைகளுக்கு நன்றாக பொருந்தும். இதற்கு முரணாக ஒரு பேபி பிங்க் சல்வார் சூட் உடன் , உங்கள் கண்களுக்கு இதே நிற சில்வர் ஐ ஷேடோ ஒன்றை பூசி, இதை மேட்ச் செய்து எடுத்து செல்லலாம்.

party,festival,clutch,fashion,matching ,பார்ட்டி,விழா,கிளட்ச்,பேஷன்,மேட்ச்சிங்

தங்க நிற பாக்ஸ் கிளட்ச்
பாக்ஸ் வடிவ வெளிர் தங்க நிற கிளட்ச் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். நகரத்தின் இரவு நேர பார்ட்டிக்கு உங்கள் ஸ்டைலை மேன்படுத்தி ஒரு ரிச் லுக் தரும் இந்த கிளட்ச். இதை எல்லா வித பட்டு புடவைகளுக்கு எடுத்து செல்லலாம். இதை ஒரு மெரூன் நிற பட்டு புடவையுடன் மேட்ச் செய்து இதற்கு ஏற்ற தங்க நிற காலணிகளை அணிந்து ஒரு அற்புதமான தோற்றத்தை ஏற்படுத்துங்கள்

ப்ரோகேட் கிளட்ச்
இதுவரை ப்ரோகேட்டில் குர்தா, புடவை, ப்ளௌஸ் மற்றும் பாவாடை ரகங்களை பார்த்திருப்பீர்கள். இப்போது அதே வடிவமைப்பில் கிளட்ச்க்களும் வந்துவிட்டது. மணப்பெண், பார்ட்டி, திருமணம் போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல அற்புதமான ஒரு கிளட்ச் இது. ஓவல் வடிவத்தில் பாரம்பரிய டிசைனில் தெளிவான, நேர்த்தியான ஒரு அமைப்பில், இருக்கிறது. இதன் பட்டு அமைப்பும் அதன் மேல் இருக்கும் கல் வைத்த லாக்கும் இதை இன்னும் அழகாய் காட்டுகிறது. பண்டிகை நாட்களுக்கு ஏற்ற ஒன்று. பட்டு துணியில் உள்ள புடவை அல்லது அனார்கலி சூட்டிற்கு அசத்தலாக இருக்கும்.

Tags :
|
|