Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நீங்கள் காஃபி பிரியரா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி!!

நீங்கள் காஃபி பிரியரா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி!!

By: Monisha Wed, 29 July 2020 3:15:10 PM

நீங்கள் காஃபி பிரியரா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி!!

ஒருநாளைக்கு பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை மற்றும் தொப்பை தானாகக் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி காஃபி பிரியர்களை மனமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

பெண்கள் தினசரி பால் கலப்படமில்லாத 2 - 3 கப் காஃபி குடிக்கிறார்கள் எனில் அவர்களின் உடலின் ஒட்டுமொத்த எடையிலிருந்து சராசரியாக 2.8% எடை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் ஆரோக்கியமான பெண்களைக் காட்டிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படவர்களாக இருந்தாலும், புகைப்பிடிப்பவர்கள், பிடிக்காதவர்களாக இருந்தாலும் இந்த உடல் எடையில் மாற்றம் இருந்துள்ளது.

coffee,body weight,research,health,women ,காஃபி,உடல் எடை,ஆய்வு,ஆரோக்கியம்,பெண்கள்

அதேபோல் 20 - 44 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் எடையிலிருந்து 1.3% எடை மட்டுமே குறைகிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது காஃபியில் கஃபைன் இருப்பதைக் காட்டிலும் அதில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய ஆண்டி ஒபேசிட்டி கலவை இருப்பது முக்கிய காரணம்.

20 - 44 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு பால் கலப்படமில்லாத 2 அல்லது 3 கப் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால் 3.4 % உடல் எடையைக் குறைக்கலாம் என்றும், 45 - 69 வயது கொண்ட பெண்கள் 4 கப்பிற்கு மேல் குடித்தால் 4.1 சதவீதம் உடல் எடைக் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே காஃபி புத்துணர்ச்சி அளிக்கும், டென்ஷனிலிருந்து மீட்டு ரிலாக்ஸ் அளிக்கும் என்பதைக் காட்டிலும் உடல் எடையைக் குறைக்கிறது என்பது நல்ல விஷயம்தான்.

Tags :
|
|