Advertisement

உடல் பிணிகளை குணப்படுத்து வாழைப்பழம்!

By: Monisha Fri, 21 Aug 2020 5:55:46 PM

உடல் பிணிகளை குணப்படுத்து வாழைப்பழம்!

நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது. இதனால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவது இரவு உணவுக்குப் பதில் 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பை குறையும்.

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

bananas,health,vitamins,obesity,ulcer problem ,வாழைப்பழம்,ஆரோக்கியம்,வைட்டமின்,உடல் பருமன்,அல்சர் பிரச்சனை

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்க கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும். இரவு உணவுக்குப்பின் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் தணியும்.

நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஆணும், பெண்ணும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும்

பழுத்த நேந்திரம் பழத்தை இட்லி சட்டியில் வைத்து இட்லி அவிப்பதுபோல்அவித்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் நெய் கலந்து சாப்பிட்டால் மெலிந்த உடல் தேறும்.

Tags :
|